For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீரா ஜாஸ்மினுக்கு ரூ. 10,000 அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

கண்ணூ

ரகசியமாக கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்ற குற்றத்தை சரி செய்யநடத்தப்படும் தோஷ கழிப்பு பூஜைக்காக ரூ. 10,000 தர வேண்டும் என்று நடிகை மீராஜாஸ்மினுக்கு ராஜராஜேஸ்வர் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுதுஅந்தத் தொகையை மீரா ஜாஸ்மின் கோவில் நிர்வாகத்திடம் கட்டினார்.

கண்ணூ

கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் இந்தக் கோவிலுக்கு நடிகை மீராஜாஸ்மின் வந்தார். அவருடன் படத் தயாரிப்பாளர் ஒருவரும் வந்தார். நல்லஇருட்டுடன் மழையும் பெய்து கொண்டிருந்ததால் மீரா ஜாஸ்மினும், அந்தத்தயாரிப்பாளரும் கோவிலுக்குள் நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை.

விறுவிறுவென்று கோவிலுக்குள் நுழைந்த மீரா ஜாஸ்மின் சாமி கும்பிட்டு விட்டு அதேவேகத்தில் வெளியே வந்தார். அப்போது கோவில் காவலாளி மீராவைப் பார்த்துவிட்டார். நீங்கள் எப்படி உள்ளே செல்லலாம் என்று கேட்டு மீராவை தடுத்துநிறுத்தினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடன் இருந்த தயாரிப்பாளர் மீரா இந்துமதத்திற்கு மாறி விட்டார். மீரா என்ற பெயரில்தான் அவர் அர்ச்சனையும் செய்தார்என்று கூறி விட்டு மீராவுடன் காரில் ஏறிப் பறந்து விட்டார்.

இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவப் பெண்ணான மீராஎப்படி ராஜராஜேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடலாம் என்று கோவில்நிர்வாகமும், இந்து மத அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

Meera
இந்த சர்ச்சை குறித்து மீரா ஜாஸ்மின் கூறுகையில், சாமி கும்பிட்டதில் எந்தத் தவறும்இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடவுள்களுக்கு முன்பு எந்த மதமும் இல்லை. அனைத்தும் ஒரு மதம்தான். என்னைப்பொருத்தவரை இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.கடவுள் ஒருவரே என்பது எனது நம்பிக்கை.

அந்தக் கோவிலுக்கு ரகசியமாக நான் செல்லவில்லை. இரவு 8 மணிக்கு மேல்தான்அங்கு போக முடியும். நானும் கோவில் தலைமை நிர்வாக அதிகாரியிடம் அனுமதிபெற்று விட்டுத்தான் சென்றேன். தங்கக் குடம் காணிக்கையாகக் கொடுத்தேன்.வழிபட்டு விட்டுத் திரும்பினேன்.

நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டது இந்து மத விசுவாசிகளுக்க தவறாகத்தோன்றியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மதம்மாறவில்லை. கிறிஸ்தவராகத்தான் இருக்கிறேன் என்றார் மீரா ஜாஸ்மின்.

இந் நிலையில் மீரா ஜாஸ்மின் வந்து சென்றதால் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்யசிறப்புப் பூஜை நடத்த வேண்டும். அதற்கான செலவுான ரூ. 10,000 பணத்தைகோவிலுக்கு வழங்க வேண்டும், கோவிலுக்கு வந்து சென்றதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மீரா ஜாஸ்மினை கோவில் நிர்வாகம் கோரியது.

இதை ஏற்றுக் கொண்ட மீரா ஜாஸ்மின் தனது பிரதிநிதி மூலம் கோவில் கோரியபணத்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.இன்று இரவு அல்லது நாளை தோஷ நிவர்த்திபூஜை செய்யப்படவுள்ளது. இதில் கேரளாவில் உள்ள பல்வேறு கோவில் தந்திரிகளகலந்து கொளளவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X