For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணத்தை வென்ற சிறுவன்: கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு 50 மணி நேர போராட்டம் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

ஷாகாபாத் (ஹரியானா):

60 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி 50 மணி நேரம் தவித்த ஹரியானா சிறுவன் பிரின்ஸ் ராணுவவீரர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டான்.

Prince
ஹரியானா மாநிலம் ஷாகாபாத் கிராமத்தைச் சேர்ந்த ராம்சந்தர்-கரம்ஜித் தம்பதிக்கு 3 குழந்தைகள். 3வதுகுழந்தையான 5 வயது சிறுவன் பிரின்ஸ், தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 60 அடி ஆழள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து விட்டான். அப்போது மணி ஆறரை.

இதையடுத்து கிராமமே பதறிப் போனது. போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டுஅனைவரும் விரைந்து வந்தனர். சிறுவனை எப்படி மீட்பது என்ற திட்டத்தை தீயணைப்புப் படையினர்வகுத்தனர். முதல் கட்டாக கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. சிறுவன் மயக்கமடைந்து விடக் கூடாதுஎன்பதற்காக ஆக்சிஜன அனுப்பப்பட்டது.

சிறுவனை கயிறு கட்டி மேலே தூக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது பலன் தராது என்பதால் அதைக் கைவிட்டதீயணைப்புப் படையினர் வேறு மார்க்கமாக சிறுவனை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சிகள்தோல்வியில் முடிந்தன.

தீயணைப்பு படையினரின் முயற்சி தோல்வி அடைந்ததால் ராணுவத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அம்பாலா நகரிலிருந்து ராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்தனர்.

சிறுவனை மீட்க அவர்கள் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கினர். சிறுவன் விழுந்துள்ள கிணற்றுக்கு அருகேபெரிய கிணற்றைத் தோண்டி அதன் வழியே பிரின்ஸை மீட்க திட்டமிடப்பட்டது. அந்தப் பணியை தொடங்கியராணுவ வீரர்கள், இன்னொரு புறம், குழிக்குள் சிறுவனின் நிலையை அறிவதற்காக அதி நவீன கேமராவைஉள்ளே அனுப்பினர். அந்த கேமராவை தொலைக்காட்சி ஒன்றுடன் இணைத்தனர்.

இதன் மூலம் குழிக்குள் உள்ள சிறுவன் நலமுடன் இருப்பது தெரிய வந்தது. தைரியமாக இருக்குமாறும்,பயப்படாமல் இருக்குமாறும் சிறுவனுக்கு மேலிருந்து தகவல் கொடுத்த ராணுவத்தினர், சிறுவனுக்கு பிஸ்கட்மற்றும் டீயை கயிற்றின் மூலம் உள்ளே அனுப்பினர். அதைப் பெற்றுக் கொண்ட பிரின்ஸ் அவற்றைசாப்பிட்டான்.

Prince
மருத்துவக் குழு ஒன்றும் சம்பவ இடத்தில் முகாமிட்டு சிறுவனின் உடல் நிலையை அவ்வப்போது கண்காணித்துவந்தது. அவன் சோர்வடையும்போது குளுக்கோஸ் அனுப்பி அவனை சோர்வடையாமல் பார்த்துக் கொண்டனர்.தடையின்றி ஆக்சிஜனும் உள்ளே அனுப்பப்பட்டு வந்தது.

பக்கவாட்டில் 60 அடிப் பள்ளத்தைத் தாண்டும் பணி முடிந்த நிலையில், அங்கிருந்து ஆழ்துளைக் கிணற்றுக்குஇணைப்பு கொடுக்கும் பள்ளத்தைத் தோண்ட ஆரம்பித்த வீரர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்துபெய்த மழையால் மண் மிகவும் ஈரமாகவும், இளக்கமாகவும் இருந்தது. இதனால் தொடர்ந்து பள்ளம் தோண்டமுடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் ராணுவ வீரர்கள் மிகவும் நிதானமாக இணைப்புப் பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டனர்.ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இணைப்புப் பள்ளம் தோண்டும் பணி முடிவடைந்தது.

இதையடுத்து ராணுவ வீரர்கள் அந்தப் பள்ளம் வழியாக பிரின்ஸ் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு முன்னேறத்தொடங்கினர்.

கிட்டத்தட்ட 10 அடி தொலைவு கொண்ட அந்தப் பள்ளத்தைக் கடக்க அவர்களுக்கு ஒரு மணி நேரம்தேவைப்பட்டது. ராணுவ வீரர்களுடன் ஒரு டாக்டரும் உடன் சென்றார். சிறுவனை அடைந்ததும், அந்த டாக்டர்பிரின்ஸை பரிசோதித்தார்.

பின்னர் அவனை மெதுவாக பக்கவாட்டுப் பள்ளத்திற்கு அழைத்து வந்தனர்.

இரவு ஏழரை மணியளவில் பக்கவாட்டுப் பள்ளத்திற்கு பிரின்ஸ் மீட்டுக் கொண்டு வரப்பட்டான். முஇதைஅறிந்ததும் மேலே கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், முதல்வர் ஹூடா, ராணுவ வீரர்கள், மருத்துவக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அதன் பின்னர் ஒரு ராணுவ வீரர் சிறுவனை தூக்கிக் கொண்டு கிரேனின் உதவியால் மேலே வந்தபோதுகூடியிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதபடி சிறுவனை வரவேற்றனர். கிட்டத்தட்ட 50 மணிநேரமாக ஆழ்துளைக் கிணற்றில் தத்தளித்த சிறுவன் பிரின்ஸ் பத்திரமாக மீட்கப்பட்டதை அறிந்த அவனது தாய்,தந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் அருவி போல பெருக்கெடுத்து ஓடியது.

பிரின்ஸை வாங்கி கட்டித் தழுவி கதறி அழுதனர் அந்த கிராமத்து தம்பதியினர்.

பின்னர் பிரின்ஸை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனது உடலில்ஏற்பட்டிருந்த சிறு காயங்களுக்கு மருந்து போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரின்ஸ் பத்திரமாகமீட்கப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மறு பிறவி எடுத்துள்ள பிரின்ஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என ஹரியானாமுதல்வர் ஹூடா அறிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 15,000வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேபோல மத்திய அரசும் பிரின்ஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சிறுவன் பிரின்ஸ் மிகுந்த மன வலிமை கொண்டவனாக இருந்ததால்தான் மிக நீண்ட இந்த மீட்பு முயற்சிவெற்றியில் முடிந்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் அதி நவீன கேமரா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மிகவும் சாதுரியமாக பிரின்ஸை மீட்டராணுவ வீரர்களை ஹரியானா மதல்வர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கிராம மக்கள் மனதார பாராட்டினர்.

மறுபிறவி போல உயிர் தப்பியுள்ள சிறுவன் பிரின்ஸுக்கு நேற்று 6வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.அவனுக்காக நாடு முழுவதும் பல வழிபாட்டுத் தலங்களில் இந்து, முஸ்லீம், சீக்கிய, கிருஸ்துவ மக்கள்கண்ணீருடன் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் மீட்கப்பட்ட பின், அவனது பிறந்த நாளையொட்டி பல குழந்தைகள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.அவனது படிப்புச் செலவை ஏற்கவும் பலர் முன் வந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X