For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் டாக்சி டிரைவரை தாக்கிய சிம்பு!

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

நடிகர் சிலம்பரசன் தன்னைத் தாக்கியதாக மலேசியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர்அந்நாட்டு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கும், சர்ச்சைக்கும் ரொம்ப நெருக்கம். சென்னையில் சிலமாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிசைவாசி ஒருவரை போட்டு வெளுத்ததாக சிம்புமீது புகார் கூறப்பட்டது.

Simbu with Nayanatara
பதிலுக்கு சிம்புவை குடிசைவாசிகள் சேர்ந்து புரட்டி எடுத்ததாகவும் கூறப்பட்டது.ஆனால் இதை சிம்புவும், அவரது தந்தை இயக்குநர் விஜய டி.ராஜேந்தரும் மறுத்தனர்.திமுகவினர் கிளப்பி விடும் சதி இது என ராஜேந்தர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் டாக்சி டிரைவரை சிம்புஅடித்து விட்டதாக சிம்பு மீது புதிய புகார் கிளம்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்புசிம்பு கோலாலம்பூர் போயிருந்தார். விமான நிலையத்திலிருந்து இறங்கிய அவர் ஒருஹோட்டலுக்குப் போவதற்காக டாக்சியில் ஏறினார். பின்னர் ஹோட்டலின் பெயரைக்கூறி அங்கு போகுமாறு டிரைவரிடம் கூறினார்.

டிரைவரும் அந்த ஹோட்டலுக்குப் போனார். அங்கு போனதும், இது அல்ல,இன்னொரு ஹோட்டல், அங்கு போங்க என்று சிம்பு கூறினார். இப்படி அங்கும்இங்கும் டிரைவரை அலைக்கழித்துள்ளார் சிம்பு.

இதனால் எரிச்சல் அடைந்த டிரைவர், எங்க போக வேண்டும் சார், சரியான இடத்தைச்சொல்லுங்கள், நான் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று கூறியுள்ளார்.

Simbu with Sandhya
இதைக் கேட்டதும் சிம்புவுக்கு கோபம் வந்து விட்டது. நான் சொல்கிற இடத்துக்குப்போக வேண்டியதுதானே என்று கோபமாக கேட்டுள்ளார். இதையடுத்து சிம்புவுக்கும்,டாக்சி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதில் சிம்பு, டிரைவரை அடித்துவிட்டதாக தெரிகிறது.

அந்நாட்டுச் சட்டப்படி, வெளிநாட்டவருடன் டாக்சி டிரைவர்கள் தகராறு செய்தால்அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். இதை தவிர்ப்பதற்காக, அந்த டாக்சிடிரைவர் கோலாலம்பூர் போலீஸில் சிம்பு தன்னைத் தாக்கியதாக புகார்கொடுத்துள்ளார். இருப்பினும் இதுவரை சிம்பு மீதான புகாரை போலீஸார் பதிவுசெய்யவில்லை என்று தெரிகிறது.

சிம்பு யாரையும் அடிக்கலை: டி.ஆர்.

இந் நிலையில் மலேசியாவில் டாக்சி டிரைவரை சிம்பு அடித்ததாக கூறப்படுவது பொய்யான தகவல். உண்மையில், தமிழரான அந்த டாக்சி டிரைவர்தான்சிம்புவிடம் தகராறு செய்தார் என்று கூறியுள்ளார் சிம்புவின் தந்தையான இயக்குனர் விஜய டி.ராஜேந்தர்.

அவர் கூறுகையில், வல்லவன் படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக சிம்பு கோலாலம்பூர் சென்றார். விமான நிலையத்திலிருந்து ஒரு ஹோட்டலுக்குச்செல்வதற்காக டாக்சியில் ஏறியுள்ளார். அந்த டாக்சியின் டிரைவர் ஒரு தமிழர். நல்ல குடிபோதையில் இருந்துள்ளார்.

சிம்புவைப் பார்த்ததும் நான் உங்கள் ரசிகர், எனது வீட்டுக்கு வாருங்கள். எனது நிண்பர்கள் உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.அத்தோடு நில்லாமல் சிம்பு குறிப்பிட்ட ஹோட்டலுக்குச் செல்லாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அலைக்கழித்துள்ளார்.

Simbu with Nayanatara and Reemasen
தான் கூப்பிட்டும் வர முடியாது என்று சிம்பு மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் சிம்புவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் சம்பந்தப்பட்டஹோட்டலுக்கு சென்று இறக்கியுள்ளார். அங்கும் விடாமல் தன்னுடன் வருமாறு அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து சிம்பு ஹோட்டல்நிர்வாகத்தினரிடம் புகார் கூறியுள்ளார்.

அவர்கள் டாக்சி டிரைவரிடமிருந்து சிம்புவை மீட்டுள்ளனர். இதுதான் நடந்தது. சிம்பு அந்த டிரைவரை அடிக்கவில்லை. மலேசிய நாட்டுச் சட்டப்படிவெளிநாட்டுக்காரர்களிடம் தகராறு செய்யும் டாக்சி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். எனவேதான் அதைத் தவிர்ப்பதற்காக சிம்பு மீதுபுகார் கொடுத்துள்ளார் அந்த டிரைவர். ஆனால் போலீஸார் அதை பெரிதுபடுத்தவில்லை.

ஆர்வக்கோளாறில் தமிழன் தப்பு செய்து விட்டான். இதை பெரிதுபடுத்த வேண்டாம். காய்ச்ச மரம்தானே கல்லடி படும் என்று கூறினார் ராஜேந்தர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X