வெளியுறவுத்துறை அமைச்சராவாரா ப.சிதம்பரம்?
டெல்லி:
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சராக நிதியமைச்சர்ப.சிதம்பரம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
நட்வர் சிங் விலகல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் இரு அமைச்சர்கள் விலகலால் அமைச்சரவையில்வெளியுறவுத்துறைக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கேபினட் அமைச்சர்கள் இல்லாத நிலை உள்ளது.மிக முக்கியத்துவம் வெளியுறவுத்துறையை பிரதமரே கவனித்து வருகிறார். உலக அளவில் முக்கிய நிகழ்வுகள்நடந்து வரும் நிலையில் வெளியுறவுத்துறைக்கு கேபினட் அமைச்சர் இல்லாததால் அதன் அன்றாடப் பணிகளைஇணையமைச்சர் ஆனந்த் சர்மா தான் கையாண்டு வருகிறார்.
இந் நிலையில் வெளியுறவுத்துறைக்கு ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலின் பெயர்கள் அடிபடுகின்றன.
பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறையை விரும்புகிறார். ஆனால், அவரது முக்கியத்துவம் மேலும் கூடிவிடும்என்பதால் அதை அவருக்கு வழங்க சோனியாவின் கிச்சன் கேபினட் விரும்பவில்லை.
அதே நேரத்தில் தனது பொருளாதார தாராளமய கொள்கைகளால் அமெரிக்காவின் தனி அன்பைப் பெற்றப.சிதம்பரத்தை வெளியுறவுத்துறை அமைச்சராக்கினால் அது பெரும் பலனைக் கொடுக்கும் என பிரதமர்கருதுகிறார்.
இதனால் சிதம்பரத்தை வெளியுறவு அமைச்சராக்கிவிட்டு, பொருளாதார விவகாரங்களில் புலியான பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை நிதியமைச்சர் ஆக்க சோனியாவிடம் உள்ளது. ஆனால், சிதம்பரத்தைநிதியமைச்சகத்தில் இருந்து தூரமாக வைக்க பிரதமருக்கு விருப்பமில்லை.
இதற்கிடையே உள்துறையில் சொதப்பல் செய்து வரும் சிவராஜ் பாட்டீலை அந்தத் துறையில் இருந்து நீக்கவேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை உள்ளது. ஆனால், அவர் சோனியா குடும்பத்துக்கு மிகநெருக்கமானவர். இதனால் அவர் உள்துறையில் இருந்து வெளியுறவுத்துறைக்கு மாற்றப்படலாம் என்றுகூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜிக்கு வெளியுறவுத்துறை கிடைத்தால் சிவராஜ் பாட்டீல் பாதுகாப்புத்துறைக்குப் போகவும்வாய்ப்புள்ளது.
இதற்கிடையே வெளியுறவுத்துறையைப் பிடிக்க அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபலும்முயன்று வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications