• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாலேகான் பாம்: சிமி-பஜ்ரங்தள் மீது சந்தேகம்

By Staff
|

மாலேகான்:

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் மசூதிக்கு அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) அமைப்புகாரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே பலிஎண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் , படா கப்ரிஸ்தான் என்றஇடத்தில், பிரபலமான நூரணி மசூதி உள்ளது. இங்கு இஸ்லாமியர்களின் புனிதஇரவான பராத் நிகழ்ச்சியையொட்டியும், வெள்ளிக்கிழமை என்பதாலும் 2000க்கும்மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

தொழுகை நிகழ்ச்சியை முடித்து விட்டு பிற்பகல் ஒன்னே முக்கால் மணியளவில்அனைவரும் மசூதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது, மசூதிஅருகே பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் அங்கு பெரும் பீதிஏற்பட்டது.

மசூதிக்குள் இருந்தவர்களும், வெளியே வந்து கொண்டிருந்தவர்களும் வேகம்வேகமாக வெளியேறத் தொடங்கியதால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு பலர் கீழேவிழுந்தனர். மசூதிக்குள் இருந்தவர்கள்வேகமாக வெளியேறத் தொடங்கியதால் அந்த இடமே போர்க்களம் போலகாணப்பட்டது.

குண்டுவெடிப்பில் சிக்கி பலர் பலியாகி உடல்கள் சிதறிக்கிடந்தன. இந்த நிலையில்நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கு போலஸார் விரைந்துவந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மசூதிக்குள்ளிருந்து வந்தவர்கள்ஆத்திரமடைந்தனர். போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு போலீஸ் ஜீப் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

பெரும் கலவரமாக இது மாறுவதை உணர்ந்த போலீஸார் தடியடி நடத்தியும், வானில்துப்பாக்கிச் சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். ஆசாத் நகர் போலீஸ்நிலையத்தையும் முற்றுகையிட்டு பலர் போராட்டம் நடத்தினர்.

இந்த குண்டுவெடிபபு நடந்த சில விநாடிகளில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளமார்க்கெட்டில் அடுத்தடுத்த 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புச்சம்பவங்களில் முதலில் 38 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை இது47 ஆக உயர்ந்தது.

குண்டுவெடிப்பு குறித்து தகவகல் அறிந்ததும் மகாராஷ்டிர மாநில முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் மாலேகான்விரைந்தனர்.

மாலேகான் நகரில் வகுப்புக் கலவரம் வெடித்து விடாமல் தடுக்கும் பொருட்டுஏற்கனவே அங்கு விநாயகர் சதுர்த்திக்காக நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப்படையினருக்கு உதவ கூடுதல் துணை ராணுவப் படைகளக் மாலேகானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மாலேகான் நகரில் பெரும் பதட்டம் தொடர்ந்து நிலவி வருவதால் அங்கு ஊரடங்குஉத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் முன்பு போலீஸார்பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுகள் அனைத்தும் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்ததாக மகாராஷ்டிர டிஜிபிபஸ்ரீச்சா கூறியள்ளார். மாலேகான் சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம்முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் மிக பலத்தபாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் கூடுதல் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு முன்பும் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத், டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மும்பையில் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து 200 பேர் பலியானார்கள். இந்த நிலையில் மாலேகானில்வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிமி காரணமா?:

மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு சிமி அமைப்பு காரணமாக இருக்கலாம்என போலீஸ் சந்தேகிக்கிறது.

குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவுபோலீஸார் மேற்கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்கூறியுள்ளார். தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தங்களது விசாரணையைதொடங்கியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார்சந்தேகம் தெரிவித்திருந்தாலும் அது தொடர்பான உறுதியான ஆதாரம் இதுவரைகிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது.

இந்து, முஸ்லீம்களுக்கு இடையே கலவரத்தை தூண்டி விடும் நோக்கத்தில்லஸ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்த குண்டு வெடிப்பை சிமிநடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பஜ்ரங் தள் மீதும் சந்தேகம்:

கடந்த ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலம் போனா, உல்னா பகுதிகளில் மசூதிகளில் குண்டுவெடிப்புக் நடந்தன. அந்தச் சம்பவங்களில் தொடர்புடைய பஜ்ரங்தள்ளை சேர்ந்த தொண்டர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த குண்டு வெடிப்பிலும் அவர்களது கை வரிசை இருக்குமோ என்ற சந்தேகமும்ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X