For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராக்கெட் லாஞ்சர்: நக்சல் ரகுவின் டைரி சிக்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலிருந்து ராக்கெட் லாஞ்சர்களை கடத்தியது தொடர்பாக தேடப்பட்டு வரும் நக்சலைட் ரகுவின்டைரியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

சென்னையிலிருந்து கிராந்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன லாரி மூலம் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டநூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை ஆந்திர மாநில போலீஸார் கைப்பற்றினர்.

இதையடுத்து சென்னை அம்பத்தூரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்த வேட்டையில் ராக்கெட்லாஞ்சர்களை தயாரித்துக் கொடுத்த 7 பேர் சிக்கினர். இவர்களுக்கு ராக்கெட் லாஞ்சர்களை செய்து தர ஆர்டர்கொடுத்த ரகு மற்றும் அவரது மனைவ சுதாராணி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

தற்போது போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரகு மக்கள் போர்க்குழுநக்சலைட் அமைப்பின் உறுப்பினர் என ஆந்திர போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. அதேபோல அவரதுமனைவியும் மக்கள் போர்க்குழுவைச் சேர்ந்த நக்சலைட்டு தான் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் சுதாராணியின் உண்மையான பெயர் அதுவல்ல, வசந்தா என்பது தான் அவரது நிஜப் பெயர். பிரகாசம்மாவட்டம் ஓங்கோல் அருகே உள்ள பெர்னமிட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா. ராமகிருஷ்ணன்என்பவரது தலையையில் இயங்கி வரும் நக்சலைட் பிரிவில் வசந்தா துணைத் தலைவராக இருந்து வருகிறாராம்.

வசந்தாவிடம் தான் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து அதை ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்புஒப்படைக்கப்பட்டிருந்ததாம். இதற்காகத் தான் அவரும், ரகுவும் சென்னை வந்து தங்கியுள்ளனர். மேலும்இருவரும் கணவன், மனைவியா என்பது கூட சந்தேகமாக உள்ளதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள்கிடைத்துள்ளன.

இதற்கிடையே இருவரும் நெல்லூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் போலீஸார்அங்கு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் சென்னை போலீஸாரிடம் ரகுவின் டைரிஒன்று சிக்கியுள்ளது. இந்த டைரி தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. இதில் ரகு மற்றும் அவரது கூட்டாளிகளின்திட்டங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த டைரி குறித்து ஆந்திர போலீஸாருடன் விவாதித்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்களுக்கு அறிவுரை:

இதற்கிடையே, சென்னை லாரி உரிமையாளர்கள் அனைவரையும் வரவழைத்து காவல்துறை அதிாகரிகள் தீவிரஆலோசனை நடத்தி, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

மாதவரத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம், பார்சல் லாரிஉரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் அலுவலக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாதவரத்தில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் துணை ஆணையர்கண்ணப்பன் கலந்து கொண்டார். இக்கூட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு 13 கேள்விகளை கேட்டுள்ளோம்.

அதற்குரிய பதிலை எழுத்துப் பூர்வமாக கொடுக்குமாறு கேட்டுள்ளோம். நிறுவனத்தின் முகவரி, யார் பெயரில்லாரிகள் உள்ளன, தொலைபேசி எண்கள், சரக்கு பரிவர்த்தனை விவரம், ஊழியர்கள் குறித்த விவரங்கள்,வாடிக்கையாளர்கள் யார் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

சட்டவிரோதமாக எந்தப் பொருளையும் லாரியில் எடுத்துச் செல்லக் கூடாது கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார் கண்ணப்பன். மாதவரத்தில் மட்டும் 900க்கும் மேற்பட்ட லாரி நிறுவனங்கள், புக்கிங் அலுவலங்கள்உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X