For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரவணா ஸ்டோர்ஸ்-போத்தீஸ் கட்டடங்களை இடிக்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை நகரின் பிரபல நிறுவனங்களான சரவணா ஸ்டோர்ஸ், சரவணா கோல்டுஹவுஸ், போத்தீஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அனுமதி பெறாமல்கட்டடப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடங்களை இடித்துத் தள்ள சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம்சென்னை சில்க்ஸ். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு பலஅடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன.

இதில் ஏற்கனவே இருந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டு 8 மாடிகளைக் கொண்டதாகமாற்றிக் கட்டப்பட்டது. இதற்கு பக்கத்திலேயே புதிதாக ஒரு 4 மாடிக் கட்டடம்கட்டப்பட்டது.

இதில் 8 மாடிக் கட்டடத்தில் 5 மாடிகளை அனுமதியின்றி சென்னை சில்க்ஸ் நிறுவனம்கட்டியிருந்தது. மேலும் கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்ட தரைக்குக் கீழே உள்ளதளத்தையும் அவர்கள் துணி விற்க பயன்படுத்தினர். புதிய கட்டடத்திலும் 2 மாடிகள்அனுமதியின்றி கட்டப்பட்டவை.

இந்த இரு கட்டடங்களிலும் அனுமதியின்றி கட்டப்பட்ட தளங்களை இடித்துத் தள்ளஉச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந் நிலையில் சென்னையில் அனுமதியின்றி கட்டப்பட்ட மேலும் 20 கட்டடங்களைஇடித்துத் தள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உத்தரவிட்டுள்ளது.

உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டுஹவுஸ் நிறுவனத்தின் 7 மாடிக் கட்டடம்(7 தளங்களுக்கும் இவர்கள் அனுமதி பெறவில்லை), 9 மாடிகளைக் கொண்ட நியூசரவணா ஸ்டோர்ஸின் அனுமதி பெறாத பல தளங்கள், சரவணா செல்வத்திரத்தினம்,ஜி.ஆர்.டி நிறுவனம், ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ், போத்தீஸ், கோடம்பாக்கம்சேகர் எம்போயம் ஆகியவற்றின் அனுமதி பெறாத தளங்களை இன்னும் 30நாட்களில் இடித்துத் தள்ள சி.எம்.டி.ஏ. உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X