For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவிடம் விளக்கம் கோரும் மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்தில் பிரதமர் வருகையின்போது பைலட் வாகனம் திசை மாறிச்சென்றது தொடர்பாக உரிய விளக்கம் தருமாறு கேரள அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபிஜேக்கப் புன்னோஸ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை இரவு திருவனந்தபுரம் வந்தார். விமானநிலைய வரவேற்பை முடித்து விட்டு கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு அவர்அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பிரதமரின் வாகனத்திற்கு முன்பு சென்ற பைலட் கார் திட்டமிட்ட பாதையில்செல்லாமல் வேறு பாதையில் திரும்பியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக பைலட் காரை நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் டிரைவர் சிஜூவைகாரிலிருந்து இறக்கி கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதிகபட்ச பாதுகாப்புவளையத்தின் கீழ் உள்ள பிரதமருக்கு கேரள போலீஸ் கொடுத்த பாதுகாப்பில்இவ்வளவு பெரிய ஓட்டை எப்படி விழுந்தது என்று கேரள அரசிடம், மத்திய அரசுவிளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி ஜேக்கப் புன்னோஸ் இந்தகுளறுபடி குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இன்று அவர் தனது விசாரணைஅறிக்கையை கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் கொடுப்பார். அதன்அடிப்படையில், மத்திய அரசுக்கு கேரள அரசு விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.

பிரதமரின் பைலட் காரை ஓட்டியவர் பெயர் சிஜு. இவர் தனியார் டாக்சி ஓட்டுநர்.வழக்கமான காவலர் யாரும் ஓட்டாமல், தனியார் டாக்சி டிரைவரை எப்படி பிரதமரின்பைலட் காரை ஓட்டும் பணியில் நியமிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில காவல்துறையினர்தான்செய்வார்கள் என்றாலும் கூட பிரதமரின் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளசிறப்பு அதிரடிப்படையினரின் (கருப்புப் பூனை) யோசனைப்படிதான் பாதுகாப்புஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில காவல்துறையினர் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் கூட சிறப்புஅதிரடிப்படையினரின் அனுமதியுடன்தான் செய்ய வேண்டும். ஆனால் கேரளபோலீஸார் பைலட் கார் ஓட்டுநரை மாற்றியது குறித்து பிரதமரின் பாதுகாப்புப்படையினரிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த அஜாக்கிரதையான போக்கு காரணமாக சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

கேரள காவல்துறையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்புதான் 600 புதிய ஓட்டுநர்கள்பணியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் பிரதமரின் வருகையின் போது பைலட்காரை , காவல்துறை ஓட்டுநர் செலுத்தாமல் தனியார் கார் ஓட்டுநரை ஏற்பாடு செய்ததுமத்திய அரசுக்கும், பிரதமரின் பாதுகாப்புப் படைக்கும் பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

மேலும், பைலட் காராக பயன்படுத்தப்பட்டதும் காவல்துறை வாகனம் அல்ல, அதுஒரு சுற்றுலா டாக்சி. கிட்டத்தட்ட ஒரு கால் டாக்சியை பைலட் கார் போல கேரளஅரசும், காவல்துறையும் பயன்படுத்தியுள்ளது.

முக்கியப் பிரமுகர்களின் வாகன அணி வகுப்பில் பைலட் காரும், அதன் ஓட்டுநரும்மிகவும் முக்கியமானவர்கள். காரணம், இந்த வாகனத்தைப் பின் தொடர்ந்துதான்முக்கியப் பிரமுகரின் காரும், அவர்களின் பாதுகாப்பு வாகனங்களும் அணி வகுத்துவரும்.

பிரதமருக்கு இ மெயில் மிரட்டல் வந்திருந்த நிலையில், பாதுகாப்பில் இவ்வளவுபெரிய குளறுபடியை செய்து கேரள காவல்துறை மிகப் பெரிய அவப்பெயரைசம்பாதித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில், டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தகேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பயணத்தைரத்து செய்து விட்டு நேராக பிரதமரைப் போய்ப் பார்த்து நடந்த குளறுபடிக்குமன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும், பிரதமரின் திருவனந்தபுரம் பயணம் முடியும் பைலட் காரை செலுத்தும்பொறுப்பையும் மாநகர காவல்துறை ஆணையர் மனோஜ் ஆப்ரகாமிடம்ஒப்படைத்தார்.

இந்த சர்ச்சை குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், இதை மிகவும் சீரியஸாக நாங்கள்எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த குழப்பத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். புலனாய்வுத்துறைபோலீஸார் இதில் தவறு செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்துவிரிவான விசாரணை நடத்தி மத்திய அரசிடம் விளக்கம் அளிப்போம் என்றார்பாலகிருஷ்ணன்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சிஜூ பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர்அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறவே அவரது குடும்பத்தினர் மருத்துவனைஒன்றில் சிஜூவை அனுமதித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X