பெரியார் படத்தில் காமராஜர்-காங் கோரிக்கை
சென்னை:பெரியார் படத்தில் காமராஜர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம் பெற வேண்டும் எனதமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி திரைப்படம் போலபெரியார் திரைப்படம் ஒரு காவியமாக வெளி வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான்முதல்வர் கருணாநிதி ரூ. 95 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.
கல்விக் கண் திறந்த காமராஜர் என்றும், தமிழக மக்களின் ரட்சகர் என்றும்பெருந்தலைவர் காமராஜரை பெரியார் போற்றியுள்ளார்.
எனவே பெரியார் படத்தில், பெருந்தலைவரும், பெரியாரும் சம்பந்தப்பட்டகாட்சிகளும், கருத்துக்களும் அதிக அளவில் இடம் பெற இயக்குனர் ஞானராஜசேகரனும், மற்றவர்களும் துணை புரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்திற்காக பெரியாரும் காமராஜரும் சந்திக்கும் காட்சி ஒன்றுபடம்பிடிக்கப்பட்டது. ஆனால், காமராஜர் குறித்து அதிகமான காட்சிகளை படத்தில்இடம் பெறச் செய்ய வேண்டும் என கிருஷ்ணசாமி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications