திமுகவுக்கு இயற்கையாகவே கேடு வரும்-வைகோ

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:அழகான கூடுபோல கட்டி மதிமுகவை காத்து வருகிறோம். இந்த கூட்டை கலைக்ககழுகுகள் முயற்சிக்கின்றன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

விருதுநகரில் மதிமுக எம்எல்ஏ வரதராஜனின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ பேசுகையில்,

நான் திருமண விழாக்களில் அரசியல் பேசுவதில்லை. ஆனால், இப்போதுபேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. மதிமுக கூடாரத்தை சிதைத்து,சின்னாபின்னமாக்க முதல்வர் கருணாநிதி நினைக்கிறார் என்று எனக்கு முன்னாள்பேசிய நாஞ்சில் சம்பத் கூறினார்.

அதை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால், மதிமுகவை எந்த சக்தியாலும்அழிக்கவோ, நிர்மூலமாக்கவோ முடியாது.

தேர்தலில் வெற்றிகள் கிடைக்காமல் போகலாம். குறைந்த ஓட்டுகளில் தோற்பதன்மூலம் பதவிகள் கிடைக்காமல் போகலாம். இந்த வகையில் சட்டசபை தேர்தலில்மதிமுகவினர் பலர் வெற்றி, பதவி வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்த தோல்வியைநாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

சென்னை அண்ணாநகரில் ஐந்து பேரை அழைத்து வந்து மதிமுகவைச் சேர்ந்த 1,000பேர் திமுகவில் சேர்ந்ததாக பிரசாரம் செய்கின்றனர். சிவகாசியில் யாரோ ஒரிருவர்சுயநலத்திற்காக மதிமுகவில் இருந்து விலகி சென்றிருக்கலாம். அவர்களை நான்விமர்சிக்க விரும்பவில்லை.

கட்சிக்கு உண்மையாக உழைத்துவிட்டு வெளியேறியிருந்தாலும் அவர்களுக்குநன்றிக்கடனாக இருப்பேன்.

மதிமுக ஒரு ஜீவ நதி. மதிமுகவில் தொண்டர்கள் இருக்கின்றனரா என கருணாநிதிகேட்டார். இப்போது எங்களிடம் இருந்து ஆயிரம், 5 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் எனபொய் பிரசாரம் செய்கிறார்.

எங்கள் கட்சியின் மீது உயிராக இருப்பவர்கள் கட்சியை விட்டு விலகமாட்டார்கள்.மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை கையில் வைத்துள்ள திமுகவிற்குஆள், அம்பு, பரிவாரங்கள் மற்றும் கோடானுகோடி பணம் இருக்கிறது.

இருந்தும் மதிமுக என்ற கட்சியே இருக்கக்கூடாது என்று ஏன் நினைக்கிறார்கள்.எங்கள் மீதுள்ள பயம் தான் இதற்கு காரணம். அனைத்து இடத்திலும் வெற்றி எனசொல்லிவிட்டு இப்போது ஏன் மதிமுகவை பார்த்து பயப்படுகிறீர்கள்.

கெடுவான் கேடு நினைப்பது போல திமுகவுக்கு இயற்கையாகவே கேடு வரும்.அழகான கூடுபோல கட்டி மதிமுகவை காத்து வருகிறோம். இந்த கூட்டை கலைக்ககழுகுகள் முயற்சிக்கின்றன.

உங்கள் திமுக இயக்கம் இப்படியே நீடிக்கும் என்பது சாஸ்வதமாக இருக்காது. காலம்ஒருநாள் மாறும். அதிமுக கூட்டணி வெல்லும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+