முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடா?: பாஜக கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்குஎதிரானது என பாஜக கூறியுள்ளது.

அக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனஅமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். அவரது கருத்து துரதிருஷ்டவசமானதுமட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கே விரோதமானது.

இது போன்ற சட்ட விரோதமான இட ஒதுக்கீடு கூடாது என ஆந்திரா மற்றும் அலிகார்பல்கலைக்கழக விவகாரங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

சிறுபான்மையினருக்கு நலன் கிடைக்க வேண்டும் என்பதை விட, அவர்களின்ஓட்டுகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பாஸ்வான் இப்படிப்பேசியுள்ளார்.சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் இது போன்றகருத்துக்களை காங்கிரஸ் கட்சியும் கூறி வருகிறது.

தற்போது அதில் பஸ்வானும் சேர்ந்துவிட்டார். ஓட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு இப்படிப் பேசுவது ஆபத்தானது. இது நாட்டை மறுபடியும் துண்டாடும்நிலைக்கு தள்ளி விடும். மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை பாஜக கடுமையாகஎதிர்க்கிறது.

சிறுபான்மையினர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சி,சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகள் ஆகியும், முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம்ஆகியவற்றில் ஏன் பின்தங்கியுள்ளனர் என்பதற்கு சரியான விளக்கம் அளிக்கவேண்டும்.

சிறுபான்மை நல அமைச்சகத்திற்கு இதுவரை எந்த பணிகளும் ஒதுக்கப்படாதது ஏன்என்றார் ரவி சங்கர் பிரசாத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+