For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிகவில் ஊழல் புகழ் மாஜி பொன்னுசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி விஜயகாந்த் முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பொன்னுச்சாமி. இவர் ஜெயலலிதாஅமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார். தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதிவழங்கியதில் பெரும் ஊழலில் ஈடுபட்டார்.

இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் இவர் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார். சில ஆண்டுகள் சிறையில் இருந்தவர் வெளியில்வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் பொன்னுசாமி.

இந் நிலையில் பொன்னுச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில்இணைந்தனர். இதற்கான விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில்நடந்தது.

நிகழ்ச்சியில் 8 அடி உயரம் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த்துக்கு பரிசாக அளித்தார் பொன்னுச்சாமி.இந்த சிலையை திருச்சியில் நிறுவ அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு ஜெயலலிதாவிடமிருந்து அனுமதிகிடைக்காததால் சிலையை விஜயகாந்த்துக்கே பரிசாக அளிப்பதாக தெரிவித்தார் பொன்னுச்சாமி.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.முதலில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேன் எனக்குக் கிடைத்தது. இப்போது எம்.ஜி.ஆர். சிலை என்னிடம்வந்துள்ளது. நானும் தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகன்.

என் திருமண மண்டபத்திலேயே எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து மாலைபோடுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் ஊழல்வாதிகளை (மேடையில் இருந்தபொன்னுசாமி நெளிந்தார்) கட்சியில் சேர்த்து கொள்வது ஏன் என்று பலர் என்னிடம்கேட்கின்றனர்.

மூப்பனார் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததை எதிர்த்துத்தான் தமாகாவை ஆரம்பித்தார். ஆனால்அவரே பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அதுகுறித்து கேட்டபோது, குடும்பத்தில் ஒரு சகோதரிஎப்போதாவது தவறு செய்யலாம், அவர் திருந்தி விட்டார். எனவே கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைஎன்றார்.

எனவே தவறு செய்பவர்கள் எப்போதுமே தவறு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஒரு கட்சியே ஊழலை மறந்து கூட்டணி வைத்துக் கொள்ளும்போது பொன்னுச்சாமி போன்றவர்களை எனதுகட்சியில் சேர்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. நான் இப்போதும் சொல்கிறேன், ஊழலை நிச்சயம்ஒழிப்பேன்.

நதிகள் எல்லாம் கடலில் சென்று கலந்தாலும் கடலின் உப்பு தன்மை மாறாது.அதுபோல யார் வந்து கட்சியில் இணைந்தாலும் தேமுதிகவின் தனித்தன்மையும்மாறக்கூடாது என்பதில் நான் பிடிவாதமாக இருக்கிறேன்.

எனவே விருப்பப்பட்டு வந்து சேர்பவர்களை தடுக்கமுடியாது. பலர் கட்சியில் சேரசேர சுமை கூடுவதாக நான் நினைக்கவில்லை. மாறாக இன்னும் மக்களுக்கு பலநன்மைகளை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வளர்ச்சி திட்டங்களுக்கு விஜயகாந்த்வழிவிடவேண்டும் என்று கூறுகிறார். யார் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுகட்டைபோடுவது. கடந்த 99ம் ஆண்டே ஆதிதிராவிட மக்கள் வீடு கட்டி கொள்வதற்காகஇரண்டரை ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவன் நான். மக்களுக்காக நான்எதையும் செய்வேன், சாதிப்பேன்.

27 வருட காலத்தில் எனது சொந்தப் பணத்தை வைத்து பலருக்கு உதவி செய்துள்ளேன். டி.ஆர்.பாலு இத்தனைவருடங்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே, 4 மீனவர்களுக்கு படகு வாங்கிக் கொடுத்திருப்பாரா?சொந்தப் பணத்தில் ஏதாவது தர்மம் செய்ததுண்டா?

சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் கட்சியே வேண்டாம்என்று ஓடி இருப்பேன். மண்டபத்தை இடிப்பதற்கு பயந்தால் என்னால் கட்சி நடத்தமுடியுமா. இதுவே கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் திருமண மண்டபம் என்றால்இடிப்பார்களா.

திருமண மண்டபத்தை இடித்து விடுவோம் என்று மிரட்டினால் நான் பயந்து விட வேண்டுமா? இந்தமண்டபத்தை இடித்து விட்டால் கட்சி நடத்த முடியாதா? இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

அறிவாலயத்தில் பின்புறம் திருமண மண்டபம் இருப்பதை போல எனக்கும் கட்சிஅலுவலகத்திற்கு அருகேயே திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு அடிக்கடி மக்கள்கூட்டம் கூடுகிறது என்ற எரிச்சலில் அதை இடிக்க வேண்டும் என்கின்றனர். வேண்டும்என்றே திட்டம் தீட்டுவதை சதி என்று தான் சொல்ல வேண்டும்.

விஜயகாந்த்தை அழித்து விட வேண்டும் என்பது அவர்களது எண்ணம். அவர்கள் என்ன வேண்டுமானாலும்சொல்வார்கள், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

எங்களை ஆட்சியில் அமர்த்தினால் நல்ல தமிழகத்தை உருவாக்கி காட்டுவோம்.மக்களும், நடுநிலை பத்திரிகைகளும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.

அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பத்திரிகைகள், மீடியாக்களைவைத்து கொள்ள கூடாது. ஆனால் இங்கு நிலைமையே வேறு. டிவிக்கள் அனைத் தும்அவர்களின் கட்டுபாட் டில் உள்ளது. நான் நல்லவன் என்று யாராவது சொன்னால்அதை காட்டமாட்டார்கள். குடிகாரன் என்று சொல்லிவிட்டால் போதும் அன்றுமுழுவதும் வேறு செய்தியே கிடையாது. அதையே திரும்ப திரும்ப காட்டுவார்கள்.

சதாம் உசேன் எப்படி வாழ்ந்தார்? தங்க பாத்ரூமில் குளித்தார், தங்க அறையில் வாழ்ந்தார். ஆனால் இன்றுஅவரது நிலை? அதுபோலத்தான் தெய்வம் நின்று கொல்லும். நான் மக்களையும், தெய்வத்தையும் தான்நம்புகிறேன். வேறு எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்.

கட்சி உறுப்பினர்கள் ஒவ் வொருவரும் பிரசார பீரங்கிகளாக இருக்கவேண்டும்.எதற்கும், பயப்படக்கூடாது. கட்சி தலைமை சொல்வதை கேட்டு நடந்துக்கொள்ளுங்கள் என்றார் விஜயகாந்த்.

இந்த நிகழ்த்தியில் பாளையங்கோட்டை முன்னாள் அதிமுக எம்எல்ஏ தர்மலிங்கம்,அரவகுறிஞ்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜெகதீசன், கரூர் மாவட்ட அதிமுகபொருளாளர் பேங்க் நடராஜன், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் செயலர் ஜெயராஜ்ஆகியோரும் தேமுதிகவில் இணைந்தனர்.

அதே போல திண்டுக்கல், வேலூர், சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர் மாவட்டங்களைசேர்ந்த 5,000 ஆயிரம் பேர் திமுக, அதிமுக, பாமகவிலிருந்து விலகி தேமுதிகவில்இணைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X