மதுரையில் ஐ.டி. திருவிழா-கனெக்ட் மதுரை
மதுரை:15க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் கனெக்ட் மதுரை என்ற கூட்டம் மதுரையில்இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தென் பிராந்திய இந்திய தொழிலக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் டி.கண்ணன்செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய தொழிலக சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து இந்தகூட்டத்தை நடத்துகின்றன.
இதில் 15க்கும் மேற்பட்ட நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மதுரைமற்றும் தென் மாவட்டங்களில் தங்களது நிறுவனங்களை நிறுவ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தகூட்டம் பேருதவியாக இருக்கும்.
தென் தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் 6000க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் படித்து முடித்துவெளியே வருகின்றனர். அவர்களுக்கு தங்களது பகுதியிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வகை செய்யவேண்டும்.
மதுரை போன்ற நகரில் தங்களது முதலீடுகளை செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தற்போதுசாதகமான சூழ்நிலை நிலவுகிறது. பெருநகரங்களை விட இங்கு செலவு குறைவு, போதிய நிலம் கிடைக்கும்,விமான நிலையம் உள்ளது என்பன கூடுதல் சாதக அம்சங்கள் ஆகும். பிற பெரிய நகரங்களை விட இங்குவாழிட செலவும் 20 சதவீதம் குறைவாகும்.
தமுக்கம் மைதானத்தில் நடந்த துவரும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் தென் பகுதியின் முன்னேற்றத்தைவிரிவுபடுத்துவது (ஸ்பீட்) என்ற 3 நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக கனெக்ட் மதுரை கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
ஸ்பீட் மாநாட்டின் உப தலைவரான திணேஷ் கூறுகையில், ஏற்கனவே சென்னையில் இதுபோன்ற ஒரு கூட்டம்நடத்தப்பட்டது. தற்போது 2வது முறையாக மதுரையில் நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைநிறுவுவதற்கு மதுரை மிகப் பொருத்தமான இடம் என்பதை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் இந்தக்கூட்டதிதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தென் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய தொழிலக சம்மேளனத்தின் மதுரை மண்டல தலைவர் லிஜி ஜார்ஜ் கூறுகையில், மதுரையில் சுற்றுலாவைமேம்படுத்தும் நோக்கிலும் இந்த கனெக்ட் மதுரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த ஆண்டு மட்டும்மதுரைக்கு 2000 வெளிநாட்டவர் மருத்துவ சுற்றுலாவாக வந்து சென்றுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உணவு திருவிழா, வர்த்த திருவிழா ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications