நாளை முதல் கட்டண சேனலாகிறது சன் டிவி
சென்னை: தமிழின் நம்பர் ஒன் தொலைக்காட்சியான சன் டிவி நாளை முதல் கட்டண சேனலாகிறது.
இதுவரை இலவச சேனலாக இருந்த சன் நாளை முதல் கட்டண சேனலாகிறது. இருப்பினும் சென்னையில் மட்டும்(இங்கு செட் டாப் பாக்ஸ் திட்டம் அமலில் உள்ளது) இது இலவச சேனலாகவே தொடரும் என சன் டிவிநிர்வாகம் அறிவித்துள்ளது.
செட் டாப் பாக்ஸ் அமலில் இல்லாத பிற பகுதிகளில் சன் டிவியைப் பார்க்க மாதம் ரூ.12 கட்டணம் செலுத்தவேண்டும். இதில் வரிகள் அடங்காது. வீடுகளுக்கு கேபிள் இணைப்பு வழங்கும் சர்வீஸ் புரொவைடர்கள் இந்தக்கட்டணத்தை சன் டிவிக்கு செலுத்த வேண்டும். ஒரு வீட்டுக்கு ரூ. 12 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 30ம் தேதிக்குள் பிற பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்றவற்றிலும் செட் டாப்பாக்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்படி பிறநகரங்களிலும் செட் டாப் பாக்ஸ முறை அமலுக்கு வந்தால் சென்னையைப் போலவே அங்கும் இலவசசேனலாகவே சன் டிவி தொடருமா அல்லது சென்னையிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
பிற தனியார் தொலைக்காட்சிகள் அனைத்தும் சென்னையில் இலவச சேனலாகவே உள்ளதால் அவை நீடிக்கும்வரை சன் டிவியும் இலவச சேனலாகவே தொடரும் என சன் டிவி தெளிவுபடுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications