மீண்டும் கலாமுக்கு காங். ஆதரவா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:குடியரசுத் தலைவர் பதவிக்கு யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனகாங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. அவரையே மீண்டும்குடியரசுத் தலைவராக்க வேண்டும் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க பாஜக பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால்,இந்தப் பதவியை மீண்டும் ஏற்க கலாம் இதுவரை தயாராக இல்லை.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்விசெய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான நிலவரங்களை காங்கிரஸ் கட்சிஉன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதுகுறித்து பொருத்தமான முடிவை, பொருத்தமான நேரத்தில் காங்கிரஸ் எடுத்து அறிவிக்கும். இதுவரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது மிகவும் மோசமான, விஷமத்தனமான செயல். ஆனால் இதை பயன்படுத்திமகாராஷ்டிராவில் சிலர் கலவரத்தை தூண்டி விட்டுள்ளனர். அதை அடக்க மகாராஷ்டிர அரசு தீவிரநடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார் சிங்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+