இளங்கோவன் மகனுக்கு இளைஞர் காங். பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர்இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரோ, சுதர்சன நாச்சியப்பன், ஜெயசிம்மா, பிஜூ சாக்கோ, அமுல்பிரகாஷ், தவுலத் கான் உள்பட 16 பேர் பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை தலைவர்களாக சத்யமூர்த்தி, ரஜினிகாந்த், தாஸ்பாண்டியன், குல்பி தங்கராஜ், சீனிவாசன், ராஜமகாலிங்கம்,பிரகாஷ் ஜெயின், டாக்டர் ஜாகீர் அப்பாஸ், ஜோதி மணி ஆகிய 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தைப் போலவே தனது மகனுக்கும் கட்சியில் பதவி கேட்டு பல காலமாகபோராடி வந்தார் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications