யுஎஸ்-இளம் நடன கலைஞர்களுக்கு போட்டி

Subscribe to Oneindia Tamil

Padmaசின்சினாட்டி:இந்திய கலாச்சார மையம் சார்பில் நடனக் கலைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இளம் நடனக் கலைஞர்களுக்காக இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி2ம் தேதி அறிவிக்கப்படும்.

முதல் பரிசாக 100 டாலர்களும், 2வது பரிசாக 50 டாலர்களும், 3வது பரிசாக 25 டாலர்களும் பரிசாகஅளிக்கப்படும்.

ஆறுதல் பரிசு பெறும் ஒருவருக்கு குச்சிப்புடி ரங்க பிரவேசம் டிவிடி மற்றும் சிடி பாக்ஸ் இலவசமாகவும்,இன்னொரு ஆறுதல் பரிசாக பரதநாட்டிய அரங்கேற்ற டிவிடியும், 2 பேருக்கு டான்ஸஸ் ஆப் இந்தியா-வேர்ல்டுகாலண்டர் பரிசாக அளிக்கப்படும்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு வயது தகுதி 10 முதல் 18 வயதாகும். நடனத்தின்அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்தோர் இதில் பங்கேற்கலாம்.

போட்டி குறித்த இதர தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை அனுப்ப இணைய தளம் மூலம் அணுகலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இணைய தள முகவரி:

http://www.culturalcentreofindia.com/DanceScholarships.html

இவ்வாறு இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பத்மா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+