For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்: புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்த முயன்றால் இலங்கையும், சிங்களர்களும் கடும்விளைவுகளைச் சந்திப்பார்கள் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் கொழும்பில் அதிபர் ராஜபக்ஷே தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள்இயக்கத்திற்கு தடை விதிப்பதில்லை எனவும், அதேசமயம், பயங்கரவாத தடைச் சட்டத்தை கடுமையாகஅமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2002ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோது இந்த சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போதுஇந்த சட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் பத்திரிக்கை ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர்விளக்கம் அளிக்கையில், இந்த கொடுங்கோல் சட்டத்தை சில காலத்திற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் தூங்கவைத்திருந்தது. தற்போது அந்த கொடுங்கோலனுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது இலங்கை அரசு.

இதனால், விடுதலைப் புலி வீரர்கள் மட்டுமல்லாது, அத்தனை தமிழ் இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப்போராட்டத்தில் குதிக்கும் நிலை உருவாகும். இதனால் இந்த நாடும், அதன் மக்களும்தான் பாதிக்கப்படுவார்கள்என்றார் தயா மாஸ்டர்.

இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இலங்கை அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் தொர்பின்னூர் ஓமர்சன் கூறுகையில், போர்நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு முரனாண முடிவு இது.

இதன் மூலம் அனைவருக்கும் (இலங்கை அரசு, புலிகள், சமரசக் குழு) இடையே உள்ள இடைவெளி மிகவும்அதிகரித்து விடும். இந்த சூழ்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கதி என்ன என்பது தெரியவில்லை என்றார்ஓமர்சன்.

இதற்கிடையே நேற்று இரவு தொலைக்காட்சியில உரையாற்றிய அதிபர் ராஜபக்ஷே, பயங்கரவாத தடைச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எங்களுக்கு இனிமேல் எந்த வழியும்தெரியவில்லை. அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள், மக்கள் அமைப்புகள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் ராஜபக்ஷே.

இந்த நிலையில் திரிகோணமலையில் ராணுவத்தினருடன், விடுதலைப் புலிகள் நடத்திய சண்டையில் புலிகள்தரப்பில் வீசப்பட்ட குண்டு பள்ளிக்கூடம் மீது விழுந்தது. இதில் சிலர் காயமடைந்தனர். யாரும் இறந்ததாக தகவல்இல்லை.

நளினி, முருகன் புழல் சிறைக்கு மாற்றம்:

இதற்கிடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும், அவரது கணவர்முருகனும் வேலூர் சிறையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர்.

சென்னை அருகே புழலில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய மத்திய சிறை கட்டப்பட்டுள்ளது. சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இந்த சிறைக்கு மாற்றப்படுகின்றனர். நாளை முதல் இந்தப் பணிதொடங்குகிறது.

இந்த சிறைக்கு வேலூர் சிறையிலிருந்தும் சிலரை கொண்டு வந்து அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்குதற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களில் 200 பேர் புழல் சிறைக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் நளினியும், முருகனும் அடங்குவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. நளினி ஆயுள் தண்டனைக் கைதி ஆவார். புழல் சிறைக்கு மாற விருப்பம்தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து விரைவில் நளினியும், முருகனும் புழல் சிறைக்கு மாற்றப்படவுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு இந்திய வெடிபொருள்:

இந்நிலையில் இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகேபோலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர்.

ஈழப் பிரச்சினை உக்கிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தமோதலில், அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

புலிகளைத் தாக்குகிறோம் என்று கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்களை விமானப்படையாலும், ராணுவத்தாலும் தாக்கி அழித்து வருகிறது இலங்கைஅரசு. இதனால் இலங்கைக்கு ராணுவ ரீதியிலான எந்த உதவியையும் இந்தியா செய்யக் கூடாது, ராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது, பாக் ஜலசந்தியில்இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து செல்லக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார். தமிழகக் கட்சிகளின்நெருக்குதலைத் தொடர்ந்து இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் அளிக்கப்பட மாட்டாது, ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசுதெளிவுபடுத்தியது.

ஆனால் மத்திய அரசின் உத்தரவாதத்தை மீறி, இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸார் ஒரு லாரியின் மீது சந்தேகமடைந்தனர்.

உடனடியாக அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் 40 பெட்டிகளில் வெடிமருந்துகள், டெட்டனேட்டர், கேப் உள்ளிட்ட ரூ. 4லட்சம் மதிப்புள்ள வெடிபொருட்கள் இருந்தன.

இந்த வெடிபொருட்கள் குறித்த ஆவணங்களை டி.எஸ்.பி. மாறனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தபோது, நாக்பூரில் உள்ள சோலார் எக்ஸ்புளோசிவ்நிறுவனத்திலிருந்து இந்த வெடிபொருட்கள், இலங்கை கடற்படையினருக்காக அனுப்பப்படுவதாக அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. உரியஆவணங்கள் காட்டப்பட்டதால், போலீஸார் அந்த வெடிபொருள் லாரியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

இலங்கையில் உள்ள ரக்சமா-வல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கைக்குஎந்தவகையான ஆயுத உதவியும் செய்யக் கூடாது என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை கடற்படைக்குவெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X