பெரியார் சிலை-தயானந்த சரஸ்வதி மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சுவாமிதயானந்த சரஸ்வதி மீது திருச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கு அருகேபெரியார் சிலையை வைக்க தி.க. முடிவு செய்தது. இதற்காக சிலையும்நிறுவப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்புக்கு முன்பாக சிலையின் தலையை சிலவிஷமிகள் தகர்த்துவிட்டனர்.

இதனால் தமிழகம் முழுவதும் தி.க மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்து மதவழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதலில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் பெரியார்சிலை தகர்ப்பு வழக்கில் இந்து தர்ம ஆச்சார்ய சபா அறக்கட்டளைஒருங்கிணைப்பாளரும், பிரபல துறவியுமான தயானந்த சரஸ்வதியின் பெயரைபோலீஸார் சேர்த்துள்ளனர்.

அவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.பெரியார் சிலை தகர்ப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியைச்சேர்ந்த 4 பேரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தயானந்த சரஸ்வதியின்பெயரை வழக்கில் சேர்த்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தயானந்த சரஸ்வதியும் கைது செய்யப்படுவாரா என்று போலீஸ்தரப்பில் கேட்டேபாது அதுகுறித்து மேலும் விவரிக்க இயலாது என்று போலீஸார்தெரிவித்தனர். இருப்பினும் தயானந்த சரஸ்வதியிடம் விசாரணை நடத்தப்படக் கூடும்எனத் தெரிகிறது.

கடந்த 5ம் தேதி பெரியார் சிலையை கோவிலுக்கு அருகே வைப்பதற்கு தயானந்தசரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சிலையை வேறு இடத்தில் வைக்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்படும் என தயானந்த சரஸ்வதி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பெரியார் சிலை தகர்ப்புக்கு தயானந்த சரஸ்வதி கண்டனம்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் சிலைசேதப்படுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது.

பிரச்சினைகளை அமைதியான முறையிலும், சுமூகமான முறையிலும்தான் தீர்க்கமுடியும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். கோவை அருகேஆணைக்கட்டி என்ற இடத்தில் அர்ஷ வித்யா குருகுலத்தை தயானந்த சரஸ்வதி நடத்திவருகிறார். அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள், ஆதரவாளர்கள்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+