வாஜ்பாய்-அத்வானி மோதல்: கலக்கத்தில் பாஜக
டெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயைத் தாக்கி அத்வானி அளித்த பேட்டி குறித்து கருத்துகுறித்து, பாஜக மறுத்துவிட்டது.
வாஜ்பாய்க்கும் பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கும் இடையே நிலவி வரும் பனிப் போர் டிவி பேட்டிமூலமாக மீண்டும் வெளியில் தலைகாட்டியுள்ளது.
வாஜ்பாயை பிரதமராக்க நான் தான் முன்பு முன் மொழிந்தேன். ஆனால், நான் செய்த உபகாரத்துக்குபிரதி உபகாரமாக அடுத்த தேர்தலில் என் பெயரை வாஜ்பாய் முன்மொழிய மாட்டார்என்று கருதுகிறேன். அவரிடம் நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை என்று ஒரு போடுபோட்டார் அத்வானி.
இதனால் இருவருக்கும் இடையே நடந்து வரும் திரைமறைவு மோதல் தெளிவாகியுள்ளது. மேலும் அடுத்ததேர்தலில் நானே பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவேன், வாஜ்பாயை நிறுத்தமாட்டோம் என்றரீதியில் அத்வானி பேசியுள்ளார்.
இது குறித்து பாஜக துணை தலைவர் வி.கே.மல்கோத்ராவிடம் நிருபர்கள்கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்ததோடு அந்த இடத்தைவிட்டு அவசரமாகஅகன்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications