இன்று கோவைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு இன்று இரவு 10.20 மணிக்கு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பயணிகள் நெரிசல் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு இன்றுஇரவு 10.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நாளை காலை 7.15 மணிக்கு கோவையை சென்றடையும். அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும். இன்றுகாலை முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications