சினிமா டிக்கெட் கட்டணம் அதிரடி குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக குறைத்து முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை இன்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள்,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் சென்று சந்தித்தனர்.

அப்போது அவரிடம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்என கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பில் திரையரங்கங்களில் டிக்கெட் கட்டணம்குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 1ம் தேதி முதல் திரையரங்கங்களில் டிக்கெட் கட்டணம்குறைக்கப்படுகிறது. அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்டதியேட்டர்களில் குறைந்தது 10 ரூபாயும், அதிகபட்சம் 50 ரூபாயும் கட்டணமாகஇருக்கும்.

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தது 7 ரூபாயும், அதிகபட்சம் 30ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நகராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் குறைந்தது 5ரூபாயும், அதிகபட்சம் 40 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். குளிர்சாதன வசதிஇல்லாத தியேட்டர்களில் குறைந்த கட்டணம் 4 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம்30 ரூபாயாகவும் இருக்கும்.

பேரூராட்சிப் பகுதிகளில் குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் குறைந்தது ரூ.5, அதிகபட்சம் ரூ. 25; அந்த வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தது ரூ. 4,அதிகபட்சம் ரூ. 20 என கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் குளிர்சாதன தியேட்டர்களில் குறைந்தது ரூ. 5, அதிகபட்சம் ரூ. 15;குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தது ரூ. 4, அதிகபட்சம் ரூ. 10 எனகட்டணம் இருக்கும்.

மேலும், புதிய திரைப்படங்கள் திரையிடும்போது முதல் 2 வாரங்களுக்கு டிக்கெட்கட்டணங்களை தங்களது விருப்பத்திற்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம் என முன்புபிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+