சுருங்கி வரும் ஜப்பான் மக்கள் தொகை!
டோக்யோ:ஜப்பான் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும், 2055ம் ஆண்டுவாக்கில் அந்நாட்டு மக்கள் தொகை 9கோடிக்கும் கீழாக குறைந்து விடும் எனவும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக வயதானவர்கள் நிறைந்த நாடு ஜப்பான்தான். அதேசமயம் இளைஞர்கள் அங்கு மிகவும்குறைவு. அதிலும் உலகிலேயே ஜப்பான்தான் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானில் தற்போது மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. தற்போது ஜப்பான்மக்கள் தொகை 127 மில்லியனாக (அதாவது 12.7 கோடி) உள்ளது.
மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது அந்நாட்டு அரசுக்கு கவலையைக் கொடுத்துள்ளது மக்கள் தொகைவீழ்ச்சியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அந்நாட்டு அரசு கவலைப்படுகிறது. மேலும்,முதியோர் ஓய்வூதியத் தேவை அதிகரிக்கும் எனவும் அச்சப்படுகிறது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கூறுகையில், தற்போதைக்கு முதியோர் ஓய்வூதியத்தில் எந்தப்பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் நிலைமை இப்படியே நீடித்தால் பிரச்சினை எழலாம்.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அதற்குமுதல்படியாக குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுகளை பெற்றோர்கள் சமாளிக்கத் தேவையானஉதவிகளை அரசு செய்யும் என்றார் அபே.
2002ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி ஜப்பானில் உள்ள முதியோரின் (65 வயதுக்கு மேற்பட்டோர்)எண்ணிக்கை தற்போது உள்ளதை விட இரட்டிப்பாகும் (அதாவது 40.5) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில், குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications