For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசரமாய் பொதுக்குழுவை கூட்டுகிறார் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:வரும் 25ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூட்டியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்கவும், காக்கவும் வலியுறுத்திமதுரையிலிருந்து கூடலூர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் வைகோ. இந் நிலையில் கட்சியில் பிளவுஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Vaiko

இந் நிலையில் மதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் விவகாரக் குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட முக்கியக் குழுக்களின் கூட்டம் 25ம் தேதி சென்னையில் உள்ளகட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறும் என வைகோ இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அதிருப்தி அவைத் தலைவர் எல்.கணேசன் நாளை முதல் தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைநடத்துகிறார்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,

நான் மேற்கொள்ளும் 5வது நடைப்பயணம் இது. மதிமுக ஆரம்பித்தபோது 52 நாட்களில் 1,600 கிலோமீட்டர்தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். பின்னர் நதிகள் இணைப்பை வலியுறுத்தி 42 நாட்களில் 1,200கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.

காவிரி நதிப் பிரச்சினைக்காக காவிரிப் பூம்பட்டணத்திலிருந்து கல்லணை வரை 200 கிலோமீட்டர் தொலைவுக்குநடைப்பயணம் மேற்கொண்டேன்.

பின்னர் ஸ்டெரிலைட் பிரச்சினைக்காக ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரை 100 கி.மீ தூரத்திற்குநடைப்பயணம் மேற்கொண்டேன்.

இந்த நடைப்பயணம் மூலம் மக்களை நேரடியாக தேடிச் செல்கிறேன். மக்களை சந்திக்கவே இந்த நடைப்பயணம்.முல்லைப் பெரியாறு நடைப்பயணத்திற்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு உற்சாக வரவேற்பை பொதுமக்கள்தருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து (எல்.ஜி. விவகாரம்) தெரிந்து கொள்ளபத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். நான் ஏதாவது பேசுவேன் என்றுஎதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் நான் பேச மாட்டேன். அப்படிப் பேசினால் எனது நடைப் பயணத்தின் நோக்கம் திசை திரும்பி விடும்.எனது நோக்கம் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை திட்டமிட்டபடி முடிப்பதுதான்.

எனது நோக்கத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் என்னை திசை திருப்ப முடியாது. எனது கவனத்தைவேறு பக்கம் திரும்பவும் விட மாட்டேன்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை 6 நாள் கழித்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆவேசமாககூறினார் வைகோ.

ஆனால், அதற்குள் எல்.ஜி. தனது மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துதன் பக்கம் இழுத்துவிடுவார் என்ற அச்சம் நிலவுவதால், தான் விதித்துக் கொண்ட 6 நாள் கெடுவை தானாகவேவிலக்கிக் கொண்டுவிட்டார் வைகோ.

25ம் தேதி சென்னைக்கு வந்து பொதுக் குழுக் கூட்டத்தை நடத்திவிட முடிவு செய்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X