For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

700வது விக்கெட்டை வீழ்த்திய வார்னே

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷான் வார்னே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்700வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளஷான் வார்னே 699 விக்கெட்டுகளுடன் இருந்தார். தற்போது இங்கிலாந்து அணியுடன்நடந்து வரும் ஆஷஸ் தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியஅணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப்போட்டியில் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் வார்னே.

Warneதனது 4வது ஓவரின்போது இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸை வீழ்த்தி 700வதுவிக்கெட்டைப் பெற்றார் வார்னே. மெல்போர்ன் வார்னேவின் சொந்த ஊர் என்பதால்அவரது 700வது விக்கெட் சாதனையைக் காண பெருமளவிலான ரசிகர்கள்திரண்டிருந்தனர்.

ஸ்டிராஸ் அவுட் ஆனதும் ரசிகர்கள் வார்னேவை கைதட்டி பாராட்டினர். ஆஸ்திரேலியவீரர்களும் வார்னேவைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினர். டெஸ்ட் போட்டிகளில் 700விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் வார்னேதான். மொத்தம் 144 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 10 முறை பத்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்வார்னே. மேலும் 37 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ளார்.

வார்னேவுக்கு அடுத்த சாதனையாளராக இலங்கையின் முத்தையா முரளீதரன் 674விக்கெட்டுகளை வீழ்த்தி வார்னே சாதனையைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார். விரைவில் அவர் வார்னேவின் 700 விக்கெட் சாதனையைமுறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டம் கட்டப்பட்ட பதான்:

இதற்கிடையே தென் ஆப்பிரிக்க தொடரில் சரியாக பந்து வீசாததால் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் அணியிலிருந்து தூக்கப்பட்டதைப் போல, படு மோசமாகஆடி வரும் வீரேந்திர ஷேவாக்கையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றுமுன்னாள் கி>க்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pathanஇந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரில் ஆடியஅத்தனை போட்டியிலும் இந்தியா படு மோசமாக தோல்வியுற்றது.

மோசமாக பந்து வீசிய இர்பான் பதான் டெஸ்ட் தொட>லிருந்து நீக்கப்பட்டுஅவசரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது.

காரணம், பதான் மட்டும் இல்லாமல் ஷேவாக்கும் கூட படு மோசமாகத்தான்விளையாடி வருகிறார். ஆனால்அவரை நீக்காமல் பதானை மட்டும் நீக்கியிருப்பதுகடும் கண்டனத்துக்குரியது என்று முன்னாள் கேப்டன் அன்ஷுமன் கெய்க்வாட்கூறியுள்ளார்.

கெய்க்வாட் கூறுகையில், இந்திய கி>க்கெட் அணியின் தங்க வீரராக இருந்தவர் பதான்.அதற்குள் என்ன ஆகி விட்டது? இப்போது மட்டும் ஏன் அவர் தூக்கிஎறியப்பட்டுள்ளார்?

பதானைப் போல மோசமாக விளையடி வரும் ஷேவாக்கையும் திருப்பி அனுப்பாததுஏன் என்பதை அணி நிர்வாகம் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பதான் விளையாடி வரும் பரோடா அணியின் பயிற்சியாளர் அசோக் பன்க்காமும்பதான் நீக்கப்பட்டதை கண்டித்துள்ளார். இது பதானுக்கு இழைக்கப்பட்ட கொடுமைஇது என்று கூறியுள்ளார் அசோக்.

முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியாவும் பதான் திரும்ப அழைக்கப்பட்டதைகுறை கூறியுள்ளார்.

ஆனால் பதான் நீக்கம் குறித்து கேப்டன் ராகுல் டிராவிட் கூறுகையில், அணிநிர்வாகம், தேர்வுக் குழுத் தலைவர், நான் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்துதான் இந்தமுடிவை எடுத்தோம். பதானின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் எஞ்சிய போட்டிகளில் ஆடுவதை விட உலகக் கோப்பைப்போட்டிக்கு அவர் மிகவும் அவசியம். நீண்ட காலம் இந்திய அணிக்காக அவர் ஆடவேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

அதனால்தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உலகக் கோப்பைக்கு அவர்தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் என்று சப்பை கட்டுகட்டியுள்ளார் திராவிட்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X