திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்-எல்.ஜி.
தஞ்சாவூர்:திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுகவுடன் இணைந்து செயல்பட போட்டி மதிமுக குழு முடிவு செய்துள்ளது.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான போட்டி மதிமுகவின் தஞ்சை,திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று தஞ்சை கந்தசரசுமண்டபத்தில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகபாரி தலைமை வகித்தார்.கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், கட்சியின் பொதுச் செயலாளர் செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய செயலாளர்கள் உட்பட தஞ்சை மாவட்டத்திலிருந்து 35 நிர்வாகிகளும்,திருவாரூர் மாவட்டத்திலிருந்து 28 நிர்வாகி களும், நாகை மாவட்டத்திலிருந்து 16நிர்வாகிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 29.12.2006வெள்ளிக்கிழமை சேலம் சுமங்கலி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர்எல்.கணேசனின் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு, வஞ்சகநெஞ்சத்தாலும், தன்னல எண்ணத்தாலும்,
தீதான போக்காலும் தவறான அணுகுதலாலும் மதிமுகவின் தொடர் தோல்விகளுக்கும், வீழ்ச்சிக்கும் வித்திட்ட வைகோவைபொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு செஞ்சி ராமச்சந்திரனை பொதுச்செயலாளர் பொறுப்பிற்குத் தேர்ந் தெடுத்த முடிவை நிர்வாகிகள் கூட்டம் முழு மனதுடன் வரவேற்கிறது, எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவை கட்டிக் காப்பாற்ற சபதம் ஏற்கிறது.
சனிக்கிழமை சென்னையில் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றதிமுக உயர்நிலை செயல் திட்டக்குழு, நிர்வாகக் குழு, மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட மதிமுக தொடர்புடைய தீர்மானத்தை ஆழமாகவும்,ஆக்கப் பூர்வமாகவும் சிந்தித்து கருணாநிதியின் தூய உள்ளத்தையும், பாசஉணர்வையும் புரிந்து கொண்டு அத்தீர்மானத்தை முழு மனதுடன் இக் கூட்டத்தில்வரவேற்பதுடன் தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்ற முது மொழியைமெய்ப்பிக்கும் கருணாநிதிக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
கருணாநிதி நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு திமுக திராவிட இயக்கலட்சியங்களை வென்றெடுக்கும் போராட்டங்களில் ஒன்று பட்டு பாடுபடுவது என்றுஇக்கூட்டம் முழு மனதுடன் முடிவு செய்கிறது. இது போன்ற மதிமுக நிர்வாகிகள்கூட்டத்தை மண்டலங்கள் தோறும் தொடர்ந்து நடத்துவது என்று இக் கூட்டம்ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications