மாநகராட்சி தேர்தல்-2 நீதிபதிகள், 2 தீர்ப்பு!
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் ஆளுக்கொரு தீர்ப்பை வழங்கியுள்ளதால்,இந்த வழக்கை 3வது நீதிபதி விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கவுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையையைத் தொடர்ந்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மாநகராட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை.
திமுக திட்டமிட்ட வன்முறையால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். எனவேஇந்த தேர்தலை ரத்து செய்து விட்டு 155 வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளும் தங்களைசேர்க்கக் கோரி மனு செய்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இடைக்கால உத்தரவா, 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது. அதன்படி மறுவாக்குப் பதிவு நடந்தது.
பின்னர் வழக்கு விசாரணை ஒரு வார காலத்திற்குத் தொடர்ந்து நடந்தது. தமிழக அரசின் சார்பில் பி.எஸ்.ராமனும்,அதி.க சார்பில் ஜோதியும், தேர்தல் ஆணையம் சார்பில் மாசிலாமணியும் ஆஜராகி வாதாடினர்.
நவம்பர் 16ம் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்புவழங்கப்பட்டது. ஆனால் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன்படி நீதிபதிமுகோபாத்யாயா அளித்ததீர்ப்பில் தேர்தலை முழுவதுமாக ரத்து செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வழங்கிய தீர்ப்பில் 99 வார்டுகளுக்கு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனதெரிவித்துள்ளார். இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், 3வதாக ஒரு நீதிபதி இந்த வழக்கைவிசாரித்து அதன் பின்னர் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வழங்கிய தீர்ப்பின் சாராம்சம்:
ஜனநாயக அமைப்பில் நியாயமான தேர்தல் முக்கியம். மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்ஆணையம் செயல்பட வேண்டும். இந்தக் கருத்தை ஏற்கனவே நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன.
தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. யோசித்துப் பார்க்க முடியாத நிலையில் கூட எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிமுறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முறைகேடான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் பலனை அனுபவிக்க விடக் கூடாது என்றுசுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில், தலைமைத் தேர்தல் அதிகாரி அவருடைய பதில் மனுவில் வாக்குச் சாவடிகைப்பற்றுதல், கள்ள ஓட்டு ஆகிய புகார் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றுகுறிப்பிடவில்லை.
அதேபோல மாநகர காவல்துறை ஆணையர், டிஜிபி, கூடுதல் ஆணையர் ஆகியோர் அளித்த பதிலில் ஆங்காங்கேவன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகவும், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.இவர்கள் கூறியது உண்மைக்குப் புறம்பானது. இவர்களுடைய பதில்கள் உண்மையைப் பிரதிபலிக்கும் வகையில்இல்லை.
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தபோது தேர்தல் ஆணையம் தனது சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.தன்னிடம் வந்த புகார்களை அலட்சியமாக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டதாக கூறியுள்ளார் தேர்தல்ஆணையர்.
அவ்வாறு அனுப்பப்பட்ட புகார்கள் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது குறித்து அவர்தெரிந்து கொள்ளவில்லை. அக்கறையும் காட்டவில்லை.
அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற வன்முறை நடக்கவில்லை என்றும் நியாயமாக தேர்தல் நடந்தது போல அவர்கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிலைமையை சுமூகமாகக் கொண்டு வர என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. சுருங்கச் சொன்னால், தேரத்ல் ஆணையர் மிகவும் பொறுப்பற்ற முறையில்நடந்து கொண்டுள்ளார்.
அவரது நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளைக் காக்கும் வகையில் இல்லை. அவருக்கு வழங்கப்பட்டுள்ளபொறுப்புகள், பதவியின் தன்மையை உணர்ந்து அவர் நடக்கவில்லை. தனது கடமையை செய்ய அவர் தவறிவிட்டார். ஏதோ ஒரு காரணத்திற்காக தனது கடமையை செய்யாமல் இருந்து விட்டார்.
அசாதாரணமான நிகழ்வுகளுக்கு அசாதரணமான தீர்வுதான் சரியானது. அந்த அடிப்படையில் மொத்தம் உள்ள155 வார்டுகளில் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டாம் என்றால் இக்கோர்ட்டின் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக அமைந்து விடும்.
தேர்தலின் புனிதத் தன்மையை காக்கும் பொருட்டு இந்தத் தீர்ப்பை வழங்க வேண்டியுள்ளது. ஆகவே 99வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் இங்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த வார்டுகளில் வெற்றி பெற்றவர்களஉக்கு வழங்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான வெற்றிச் சான்றிதழ் திரும்பப்பெற வேண்டும்.
99 வார்டுகளிலும் சட்ட விதிமுறைப்படி மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முழுப் பாதுகாப்புடன்நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவின் தீர்ப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ள 99 வார்டுகள்:
2, 4, 6, 8, 9, 11, 12, 14, 18, 19, 20, 22, 23, 26, 27, 31, 35, 36, 37, 40, 42, 45, 48, 49, 52, 53, 54, 55, 57, 59,63, 64, 65, 66, 67, 68, 69, 70, 73, 74, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 86, 88, 89, 91, 92, 95, 97, 102,103, 104, 105, 106, 109, 110, 111, 113, 117, 119, 120, 122, 123, 124, 125, 126, 127, 129, 130, 131, 132,133, 134, 135, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 147, 149, 150, 151, 152, 153, 154, 155.
இதில் 54 வார்டுகளில் திமுகவும், 13 வார்டுகளில் பாமகவும், 25 வார்டுகளிலும் காங்கிரஸும் வென்றுள்ளன.மொத்தமாக 92 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 140வது வார்டு மேயர் மா.சுப்ரமணியம் வெற்றிபெற்ற வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
106வது வார்டில் அதி.க சார்பில் மேயர் வேட்பாளராக கருதப்பட்ட பாலகங்கா தோல்வியைத் தழுவினார்.இதேபோல 99 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற 2 வார்டுகளும், மதிமுக வெற்றி பெற்ற 2 வார்டுகளும்அடக்கம். ஒரு வார்டில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.
நீதிபதி முகோபாத்யாயா வழங்கிய தீர்ப்பு விவரம்:
ஒரு சில மனுதாரர்களின் குற்றச்சாட்டு அடிப்படையில், மாநகராட்சியின் முழுத் தேர்தலையும் ரத்து செய்யமுடியாது. தெளிவான, சட்டப்பூர்வமான அமைப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே அதன் அடிப்படையில்,தேர்தலை ரத்து செய்யவோ, புதிய தேர்தலுக்கு உத்தரவிடவோ முடியும்.
தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யத் தவறி விட்டாலோ, விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டாலோ,அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். அப்படி நடவடிக்கை எடுத்தால் கூட அதை மட்டுமே வைத்துக் கொண்டுநடந்து முடிந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையானது அதிகபட்ச அளவில் அநீதியை இழைத்துள்ளது என்று வந்தாலோ,அல்லது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தக்கநடவடிக்கைக்கு உத்தரவிட முடியும். இந்த மனுக்கள் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதும், தேர்தலுக்குப்பின்பும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் சட்டம் 243 இசட் ஜி அடிப்படையிலும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு அடிப்படையிலும்ஆராயும்போது, அரசியல் சட்டம் 226ன் கீழ் இது போன்று தாக்கல் செய்த மனுக்களை இக்கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசியல் சட்டம் 226 பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் அடிப்படையில் எந்த உத்தரவும்பிறப்பிக்க இயலாது. மேலும் தேர்தல் நடந்து முடிந்த பிறகும் 243 இசட் ஜி அரசியல் சட்டப் பிரிவின் கீழும்,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையிலும், இதுபோன்ற வழக்கை தேர்தல் வழக்காக கருத முடியாது.
நகர பஞ்சாயத்து, 3ம் நிலை நகர பஞ்சாயத்து, மாநகராட்சி தேர்தல் விதிமுறைப்படி தான் இதுபோன்ற புகார்களைவிசாரிக்க முடியும். இவ்வழக்கைப் பார்க்கும்போது குறிப்பிட்டு எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. மேலும்மனுதாரர்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
வாக்குச் சாவடி கைப்பற்றப்பட்டதா? வாக்குப் பதிவு நன்றாக நடந்ததா.? நியாயாக, சுதந்திரமாக நடந்ததா என்றகருத்துக்களைக் கூற முடியாது. அரசியல் சட்டம் 226வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட் இந்த மனுக்களைைதள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார் முகோபாத்யாயா.












Click it and Unblock the Notifications