கூட்டணி அமைச்சரவைக்கு திமுக ரெடி?
சென்னை:திமுக அமைச்சரவையில் பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு அமைச்சர் பதவி அளிக்க திமுக முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல்வெளியில் கசிகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.கூட்டணிக்குக் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்து ஆட்சி அமைத்தது.
இதையடுத்து தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோ>க்கைஎழுப்பியது. ஆனால், அமைச்சர் பதவியை யாருக்கும் தருவதில்லை, கூட்டணிஅமைச்சரவையை அமைப்பதில்லை என்பதை ஆரம்பத்திலேயே கூட்டணிக்கட்சிகளுக்கு திமுக தெளிவாக கூறி விட்டது.
இதை ஏற்று பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சர் பதவியை கேட்கவில்லை.ஆனால் ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் பதவி வேண்டும் என காங்கிரஸ்நொங்கெடுத்து வருகிறது.
காங்கிரஸாரின் தொடர் கோரிக்கையாைல் அப்செட் ஆன திமுக, ஒரு கட்டத்தில்நீங்களே ஆட்சி அமையுங்கள், நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் எனமிரட்டல் விடுத்தது. இதனால் அரண்டு போன காங்கிரஸ்காரர்கள் கொஞ்ச காலம்கமுக்கமாக இருந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அமைச்சர் பதவி தேவை என குரல் கொடுக்கஆரம்பித்துள்ளனர். இந்த நேரம் பார்த்து சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பானவழக்கில் உயர்நீதிமன்றம் திமுகவுக்கு அப்செட் தரும் வகையிலான ஒரு தீர்ப்பைகொடுத்து ஆட்சிக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இனிமேலும் தொடர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்காமல் ஆட்சியை நடத்துவது சிரமமானதுஎன்பதை திமுக தரப்பு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவியைத் தர கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 அமைச்சர் பதவியைத் தரகருணாநிதி யோசித்துள்ளதாகத் தெரிகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளான இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை.
அதே நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு அமைச்சர் தரப்படலாம்என்கிறார்கள்.
இதுகுறித்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களுடனும டெல்லியுடனும் அவர் ஒருரவுண்டு பேசி முடித்து விட்டதாகவும் செய்தி கிளம்பியுள்ளது.
நாளை தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடருக்குப் பின்னர் இதுதொடர்பானஅறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும் என்கிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தருவதற்காக தற்போதைய திமுகஅமைச்சரவையில் உள்ள செயல்படாத சிலரை தூக்குவார்களாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு என்று வெளியாகியுள்ளசெய்தியால் காங்கிரஸ் தரப்பு சந்தோஷமாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications