பரதத்தில் பட்டய, பட்டப் படிப்புகள்
சின்சினாட்டி:இந்திய கலாச்சார மையமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் இணைந்துபரதநாட்டியத்தில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து இந்திய கலாச்சார மையத்தின் பத்மா செப்ரோலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய கலாச்சார மையம் ஆண்டுதோரும் பாரம்பரிய இந்திய கலைகளில் சிறந்துவிளங்குவோருக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
2007ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையானநாட்டியக் கலைஞர்களிடமிருந்து 98 விண்ணப்பங்கள் வந்திருந்தன.
அவற்றில் பரிசு பெற்றோர் விவரம்:
முதல் பரிசு : திவ்யா குணபலி (100 டாலர்கள்)
இரண்டாம் பரிசு : மெல்வின் வர்கீஸ் (50 டாலர்கள்)
மூன்றாம் பரிசு : சுசூப்தா கெளரி நிதி.
இந்த மையமும்ல் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்துடன் இணைந்து பரதநாட்டியத்தில் பட்டயப் படிப்பையும் அறிமுகம் செய்துள்ளன.
அந்த படிப்பு குறித்த விவரம்:
1. பரத நாட்டிய சான்றிதழ் பட்டய படிப்பு (1-3 வருடங்கள்)
2. பரத நாட்டிய ஆன்லைன் பட்டயபடிப்பு 1 வருடம்
3. பரத நாட்டிய பட்டய படிப்பு 1 வருடம்
4. இளங்கலை பரத நாட்டிய பட்டப் படிப்பு 1வருடம்
5. முதுகலை பரத நாட்டிய பட்டப் படிப்பு 2வருடம்.
இதற்கான தகுதிகள்:
1. பட்டயப் படிப்பில் சேர குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
2. பட்ட படிப்பில் சேர குறைந்தது 16 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
பயிற்சிக்கான விண்ணப்பங்களை அழகப்பா பல்கலைகழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் அஞ்சலில் அனுப்பப்படும்.
அடிப்படை முக பாவங்கள், தெய்வீக முக பாவங்கள், அடிப்படை காலசைவுகள், பரதநாட்டியத்தின் அடிப்படை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
2007 ஜனவரி 8 முதல் மார்ச் 25 வரை, ஞாயிற்று கிழமைகளில் 45 நிமிடங்களுக்குபயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பரதம், குச்சுபுடி, மோகினி ஆட்டம், திருமணம் மற்றும் பாரம்பரிய கலைகள் குறித்தஅரங்கேற்றமும் நடைபெறும். புரஃபஷனல் ஸ்டுடியோவில் இந்த நிகழ்ச்சிகள்நடைபெறும் என இந்திய கலாச்சார மையம் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி:
http://www.culturalcentreofindia.com
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications