நடிகர்கள் வருமானம்-கண்காணிக்க கோரும் திருமா

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:தேமுதிக தலைவரும், நடிகருமான விஜய்காந்த வீட்டில் நடந்த வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று விடுதலைசிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.

புதுச்சேரியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

அரசியல் அமைப்பு சட்டத்தை புதியதாக எழுத வேண்டும் என்ற கோரிக்கை தற்போது விவாதமாக எழுதந்துள்ளது. புதிய சட்டம் எழுதப்படவேண்டிய அவசியமில்லை. சமூக நீதியை பாதுகாப்பதற்காக 9வது அட்டவணையில் நீதிமன்றம் தலையிடாதவாறு சட்ட திருத்தம் கொண்டு வரலாம்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் ஏற்கனவே போட்டியிட்ட வார்டுகளில் போட்டியிடும். மேலும் கூடுதலாக பல இடங்களைஒதுக்க திமுக தலைமையிடம் கேட்க இருக்கிறோம்.

விஜய்காந்த் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது முறையானதல்ல. வருமானம்மிகுதியாக உள்ள யாரும் இத்தகைய சோதனைகள் நெருக்கடிகளை சந்தித்து தான் தீர வேண்டும். இதை விளம்பர அரசியலாக்க வேண்டியஅவசியமில்லை.

நடிகர், நடிகைகள் பெறும் வருமானத்திற்கு ஏற்ற வரைமுறையும், கண்காணிப்பும் இல்லை என்பது ஆரோக்கியமானதல்ல. சாதாரண பெட்டிக் கடைநடத்தும் சிறு வியாபாரியின் வரவு செலவுகளை கண்காணிக்கும் போது நடிகர்கள் வருமானத்திற்கும் கண்காணிப்பு அவசியம். இதற்குரியஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+