6000 ஜோடிகளின் உலக சாதனை இச்
மணிலா:காதலர் தினத்தையொட்டி பிலிப்பைன்ஸ் தலைவர் மணிலாவில், 6000 காதல் ஜோடிகள் ஒன்று கூடி முத்தமிட்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.
காதலர் தினம் உலகெங்கும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை சிறப்பாக கொண்டாடி, குதூகலிக்க காதல் ஜோடிகள்ஏகப்பட்ட ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன.
![]() |
இந்த நிலையில், மணிலாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அங்குள்ள லோவாபலூஸா என்றபூங்காவில் 6,124 காதல் ஜோடிகள் மொத்தமாக கூடினர்.
அத்தனை பேரும் தித்திப்பான முத்த்தத்திற்குத் தயாராக காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் கவுண்ட் டவுன் தொடங்கியது. சரியாக 12மணி அடித்ததும், காதலர்கள் அனைவரும் முத்தம் கொடுக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட 10 விநாடிகளுக்கு இந்த முத்த மழை பொழிந்தது.
அனைவரும் ஒரே மாதிரியாக சிவப்பு நிறத்தில் உடை அணிந்து இந்த முத்த விழாவில் பங்கேற்றனர். இது ஒரு புதிய உலக சாதனை என்றுநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹோவர்ட் பென்சன் தெரிவித்தார்.
காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது பட்டாசுகள் சரமாரியாக வெடிக்கப்பட்டன. இதயம் வடிவத்திலான பலூன்கள் வானில் நூற்றுக்கணக்கில்பறக்க விடப்பட்டன. காதலர்களின் இச் அந்தப் பிராந்தியத்தையே சூடாக்கி விட்டது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியன்று அங்குள்ள எலிசபத் பாலத்தில் 5875 ஜோடிகள் கூடி முத்தமிட்டுக்கொண்டதுதான் இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது.
தற்போது மணிலா காதல் ஜோடிகளின் 10 விநாடி முத்த நிகழ்ச்சி அந்த சாதனையை முறியடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications