அடுத்தடுத்து அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணி!
ஹாமில்டன்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுஆஸ்திரேலிய அணிக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக வெல்லவே முடியாத அணியாக, உலகின் அனைத்து அணிகளுக்கும் பெரும்சவாலாகவே விளங்கி வருவது ஆஸ்திரேலிய அணி.
எல்லா அணிகளும் எப்போதவது வெற்றி பெறும், ஆனால் ஆஸ்திரேலியா மட்டும் எப்போதாவது தோல்விஅடையும். ஆனால் இப்போது இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மாறி மாறி ஆஸ்திரேலியாவுக்கு ஆப்புவைத்துள்ளன.
முதல் ஆப்பு இங்கிலாந்திடமிருந்து வந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள்பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின.
மொத்தம் உள்ள 3 போட்டிகளில் அடுத்தடுத்து இரு போட்டிகளில் இங்கிலாந்து வென்று ஆஸ்திரேலியாவுக்குஅதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தொடரையும் வென்றது.
அடுத்த ஆப்பு நியூசிலாந்திடமிருந்து வந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடின.
இதில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து தோல்வி அடைந்து பெரும் அதிர்ச்சியைசந்தித்தது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும்ஆஸ்திரேலியா தோற்றது. இதன் மூலம் நியூசிலாந்து தொடரையும் அந்த அணி கேவலமாக பறிகொடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் இந்த தொடர் தோல்வி உலகம் மழுவதும் உள்ள கி>க்கெட் ரசிகர்களுக்கு பெரும்வியப்பையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. ஆஸ்திரேலியாவா இது என்று கேட்கும் அளவுக்கு நிலைமைகேவலமாகிப் போயுள்ளது.
அணியின் தொடர் தோல்வி ஆஸ்திரேலியாவிலும் பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் ஹாமில்டன் நகரில் 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியஅணி 346 ரன்களைக் குவித்து விளாசித் தள்ளியது. ஹைடன் 181 ரன்களைக் குவித்தார்.
ஆனால் அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிக்குத் தேவையானரன்களை 49.3 ஓவர்களில் பெற்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மகாஅடியைக் கொடுத்தது.
இந்தவெற்றியின் மூலம் சேப்பல்-ஹாட்லி கோப்பையை நியூசிலாந்து வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத்தொடர் தோல்விகளால் பல வருடங்களாக இருந்து வந்த முதலிடத்திலிருந்து 2வது இடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும்ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும்அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications