அதிமுக, தேமுதிகவுடன் சேரத் தயார்: பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் என தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என தெரிந்து தான்அதிமுகவும், மதிமுகவும் தேர்தலை புறக்கணித்தன.
அதை நிரூபிக்கும் வகையில் பல வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்தன, ஓட்டு சீட்டுக்கள் வெளியே கிடந்தன.
தேர்தலில் பதிவான ஓட்டுக்களை விட கூடுதலான ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. தேர்தல் முறைகேடு குறித்து எங்கள் கட்சி வேட்பாளர்கள்ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். கிடைத்தவுடன் வழக்கு தொடருவோம்.
2009ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம் என அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications