பட்ஜெட்: கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி!சிகரெட் விலை உயரும்-எண்ணை விலை குறையும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் தனி நபர் வருமான வரி விலக்கு விகிதம்ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2007-08ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு உற்பத்தி மற்றும் கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் வகையில், 8ம் வகுப்புபடிப்போருக்கும், 9 முதல் 12ம் வகுப்பு படிப்போருக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையிலான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனி நபர் வருமான வரி விலக்கு விகிதம் ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புகையிலை தொடர்பான பொருட்களான பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை சிமென்ட் விற்பனைக்குவரி குறைக்கப்பட்டுள்ளது.

2, 3, 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநில தொழில்நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரி விகிதங்கள் மூலம் ரூ. 3,000 கோடிக்கு நேரடி வரி வருவாய் கிடைக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெரிய அளவிலான வரி விதிப்புகள் ஏதும் இல்லை.

பட்ஜெட்டில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:

விவசாயக் கடன்களுக்கு ரூ. 2, 25,00 கோடி.

50 லட்சம் விவசாயிகளுக்கு புதிய கடன்கள்.

வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம்.

உலக வங்கி உதவியுடன் ரூ. 2,182 கோடியில் தமிழக ஏரிகள், பாசனங்களை சீரமைக்க திட்டம்.

பாரம்பரிய இந்திய மருத்துவ சிகிச்சை முறையை ஊக்குவிக்க கூடுதல் நிதி.

வங்கியிலிருந்து எடுக்கும் பணத்திற்கான வரி விதிப்பு உச்சவரம்பு ரூ. 50,000 ஆக உயர்வு.

ஊராட்சிகள் வரி இல்லா கடன் கொடுக்க அனுமதி.

ரூ. 8 லட்சத்திற்குக் குறைவான வருவாய் கொண்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

புகையிலை இல்லாத பான் மசாலா பொருட்களுக்கு வரிக் குறைப்பு.

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 1.5 கோடியாக உயர்வு.

சிகரெட்டுகளுக்கு 5 சதவீத வரி.

பிஸ்கட், ரெடி மிக்ஸ் தோசைக்கு கலால் வரி குறைப்பு.

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.1,10,000 ஆக உயர்வு.

பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்வு.

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 98,000 கோடி

நாய், பூனை உணவுக்கு கலால் வரி குறைப்பு

வாட் வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

சூரியகாந்தி எண்ணைக்கு வரி குறைப்பு

நீர்ப்பாசன கருவிகளுக்கு வரி குறைப்பு

தனியார் விமான இறக்குமதிக்கு 3% வரி விதிப்பு

சில்லறை சிமென்ட் விற்பனைக்கு வரிக் குறைப்பு.

மவுத் பிரஷ்னர்களுக்கு வரிக் குறைப்பு.

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி குறைப்பு.

விவசாய, பாசனக் கருவிகளுக்கு வரி குறைப்பு.

பாலியஸ்டர் பொருட்களுக்கு வரி குறைப்பு.

சிறு தொழில்துறைக்கு வரிச் சலுகை.

பயோ டீசல் உற்பத்திக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு

ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலை வாய்ப்புகள்.

கோவை வேளாண் பல்கலைக்கு ரூ. 50 கோடி நிதி.

காமன்வெல்த் போட்டி: டெல்லிக்கு ரூ. 350 கோடி.

ஊரக மின்மயமாக்கல் திட்டத்திற்கு ரூ. 3,983 கோடி.

கைத்தறித் துறைக்கு ரூ. 321 கோடி.

சுற்றுலா கட்டமைப்புக்கு ரூ. 520 கோடி.

பான் கார்டு கட்டாயமாகிறது.

இ-கவர்னன்ஸ் திட்டத்திற்கு ரூ. 720 கோடி.

நபார்டு வங்கிக்கு ரூ. 1800 கோடி ஒதுக்கீடு.

ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ. 425 கோடி.

330 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம்

பொது விநியோக சேவை கம்ப்யூட்டர் மயமாக்கம்.

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை.

உரத்துறைக்கு ரூ. 22,452 கோடி மானியம்.

சுகாதாரத்திற்கு ரூ. 15,291 கோடி ஒதுக்கீடு.

பெண்கள் நலத் திட்டங்களுக்கு ரூ. 8,795 கோடி.

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 11,000 கோடி.

காபி, ரப்பர், மசாலாப் பொருட்களுக்கு சிறப்பு நிதி.

போலியோ ஒழிப்புக்கு ரூ. 1,290 கோடி ஒதுக்கீடு.

எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 968 கோடி

எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்திற்கு ரூ. 969 கோடி.

வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கு ரூ. 14,365 கோடி

நடுநிலை கல்வித் துறைக்கு ரூ. 3794 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 4987 கோடி

எஸ்.சி, எஸ்.டி. வளர்ச்சிக்கு ரூ. 3,271கோடி ஒதுக்கீடு.

கல்வித்துறைக்கு 32.5% கூடுதல் நிதி ஒதுக்கீடு.

ஆரம்பக் கல்விக்கு ரூ. 10,393 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் கூடுதல் வகுப்பறைகள் கட்ட திட்டம்.

ஆண்டுதோறும் 1 லட்சம் ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்படும்.

சுகாதாரம், குடும்ப நலத்திற்கு 27.9% நிதி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 23,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+