ஸ்டாலின் பேனர் கிழிப்பு: திமுக கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேனர் கிழிக்கப்பட்டது அப்பகுதி திமுகவின>டையே பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியது. பேனரைக் கிழித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே பிள்ளையார்பாளையம் பகுதியில் திருமேட்டீஸ்வரர் கோவில் தெருவில், அமைச்சர் ஸ்டாலினின் பிரமாண்ட டிஜிட்டல்பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூடவே முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோரின் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை ஸ்டாலினின் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இத்தகவல் பரவியதும் அங்கு திமுகவினர் குவிந்தனர். பேனர் கிழிக்கப்பட்டதால்திமுகவினர் ஆவேசமடைந்தனர். இதுகுறித்து பெரிய காஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பேனரைக் கிழித்த விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications