கென்யாவை நசுக்கிய நியூசிலாந்து;ஸ்காட்லாந்தை வென்றது தெ. ஆப்பிரிக்கா
கிராஸ் ஐலெட் (செயின்ட் லூஸியா):கென்யாவை 148 ரன்களில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கும், கென்யாவுக்கும் கிராஸ் ஐலெட் தீவில் உள்ள பியூசஜோர் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் நியூசிலாந்து அணிபேட்டிங் செய்தது.
கென்ய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து மளமளவென ரன்களைக் குவித்தது. ராஸ் டெய்லரும், கேப்டன் பிளமிங்கும் அபாரமாக ஆடிரன்களைக் குவித்தனர்.
![]() |
ராஸ் டெய்லர் 85 ரன்கள் குவித்தார். பிளமிங் 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த ஸ்காட் ஸ்டைரிஸ் 63 ரன்களையும், மெக்மில்லன் 71 ரன்களையும்விளாசினர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 331 ரன்களைக் குவித்தது. இமாலய வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கென்யா,ரன் சேர்க்கத் தடுமாறியது. இடையில் மழை வேறு குறுக்கிட்டு கென்யாவை அப்செட் செய்தது.
29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கென்யா அதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது. தட்டுத் தடுமாறி விளையாடிய கென்யா இறுதியில் 183ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. ரவீந்து ஷா மட்டுமே சிறப்பாக ஆடி 71 ரன்களைக் குவித்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. கென்யாவும், கனடாவும் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்துவெளியேறுகின்றன.
பாசடெரேவில் நடந்த மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், ஸ்காட்லாந்தும் மோதின. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து சிறப்பாக பேட்செய்தது. ரன்களை அதிகம் குவிக்காவிட்டாலும் கூட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ரன்களை சேர்த்து தென் ஆப்பிரிக்காவைசோதித்து விட்டனர்.
வாட்சன் 31 ரன்களும், பிரவுன் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் சேர்த்து அணிக்கு கொஞ்சம் போல ஸ்கோரை கூட்டினர். 50 ஓவர்கள் முழுமையாகநின்று விட்ட ஸ்காட்லாந்து 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்களை சேர்த்தது.
![]() |
எளிதான வெற்றி இலக்குடன் பின்னர் களத்தில் இறங்கிய தென் ஆப்பிரிக்கா, 23.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 188 ரன்களைஎடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்தார். டிவில்லியர்ஸ் 62 ரன்கள் சேர்த்தார். ஆட்ட நாயகனாகவும் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications