கனிமொழியின் சொத்து மதிப்பு ரூ. 8.5 கோடி
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கவிஞர் கனிமொழி தனக்கு ரூ. 8.5 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவோடு கனிமொழி தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
சென்னை அண்ணா சாலையில், ரூ. 1.61 கோடி மதிப்புள்ள வணிக வளாகம். வங்கியில் ரூ. 6.58 கோடிக்கு பண இருப்பு. ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள். ரூ. 18.7 லட்சம் மதிப்புள்ள டோயோட்டா காம்ரி கார். ரூ. 3.61 லட்சம் மதிப்புள்ள நகைககள். கையில் ரூ. 15 ஆயிரம் பணம்.
கணவர் அரவிந்தன் பெயரில் பட்டுக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கனிமொழி.
இன்னொரு திமுக வேட்பாளரான திருச்சி சிவா தனது சொத்து மதிப்பு ரூ. 76.17 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா மொத்தம் ரூ. 61 ஆயிரத்து 944 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அவரது மனைவி மற்றும் மகள் பெயரில் உள்ளவையாகும்.












Click it and Unblock the Notifications