பிறந்த நாள் பரிசாக வந்த ராஜ் டிவி: கருணாநிதி
சென்னை:எனது பிறந்த நாள் பரிசாக ராஜ் டிவியும், அதன் உரிமையாளர் ராஜேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக தொலைக்காட்சி களத்தில் காட்சிகள் மாறியுள்ளன. திமுக சேனலாக இருந்து வந்து சன் டிவி திமுகவிலிருந்து தூர தள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ராஜ் டிவி அமர்ந்துள்ளது. கூடவே கலைஞர் டிவியும் விரைவில் வரப் போகிறது.
இந்த நிலையில், ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்குப் பிறந்த நாள் பரிசாக ராஜேந்திரன் சகோதரர்களும், ராஜ் டிவியும் கழகத்தில் இணைந்துள்ளனர்.
அவர்களை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்றுதான் ராஜேந்திரன் திமுகவில் இணைகிறார் என்று யாரும் கருத வேண்டாம். அவர் எப்போதும் திமுக ஆதரவாளர்தான்.
சங்க இலக்கியத்தில் காதலர்கள் யாருக்கும் தெரியாமல் சந்தித்துப் பேசுவார்கள். அதற்கு களவியல் என்று பெயர். எனக்கும், ராஜ் டிவிக்கும் இன்று அந்த முறை முடிந்து, திருமண வைபோகம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் எப்போது திமுகவில் இணைந்தீர்களோ, அப்போதே எனது உடன் பிறவா சகோதரர்களாகி விட்டீர்கள் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஏ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications