சென்னையில் ரூ.1,000 கோடியில் வீடியோகான் டிவி தொழிற்சாலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் ரூ.1,000 கோடியில் புதிய பிளாஸ்மா தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை வீடியோகான் நிறுவனம் நிறுவவுள்ளது.
இதுகுறித்து வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கூறுகையில்,
மத்திய அரசின் செமி கண்டக்டர் கொள்கையின்படி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த டிவி ஆலை அமையவிருக்கிறது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை வரும் 22ம் தேதி சந்தித்து பேசவிருக்கிறோம். தமிழகத்தை தவிர வேறு மாநிலத்திலும் இந்த தொழிற்சாலை அமைக்க நாங்கள் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை.
சென்னையில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மட்டுமே இந்த பிளாஸ்மா டிவி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications