அமெரிக்க போர் கப்பலை எதிர்த்து போராட்டம்:விடுதலை சிறுத்தைகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமெரிக்கா அணுசக்தி போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சென்னைக்கு வருவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சென்னை துறைமுகத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் இன்று காலை சென்னை துறைமுக அலுவலகம் முன்பு கட்சியின் துணை பொதுச் செயலாளர் திருமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
மீனவரணி ஒருங்கிணைப்பாளர் சேரன் உள்ளிட்ட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை போலீஸ் உதவி கமிஷ்னர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொண்டித்தோப்பு போலீஸ் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications