நிமிட்ஸ் வீரர்கள் ஜாலிக்கு துணை நடிகைகள்,மாடல் அழகிகள் ஏற்பாடு!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் நேற்று ஆட்டோக்களில் ஏறி சென்னை நகரை வலம் வந்து சுற்றிப் பார்த்தனர்.

அவர்கள் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து மாடல் அழகிகள், துணை நடிகைகளுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பல் நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று காலை சென்னை வந்த நிமிட்ஸ், துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் நிமிட்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து குட்டி கப்பல்கள் மூலம் நிமிட்ஸ் வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சென்னை நகரம் குறித்து அமெரிக்க வீரர்களிடையே காவல்துறை சார்பில் சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை நகரை சுற்றிப் பார்க்க ரெடியா என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அமெரிக்கர்கள், சிறு குழந்தைகள் போல எஸ் போட்டனர்.

எப்படிப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் ஆட்டோவில் சவாரி செய்ய விரும்புவதாக கூறினர். இதையடுத்து ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களில் இரண்டு பேராக, மூன்று பேராக, நான்கு பேராக அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஏறிக் கொண்டனர்.

பெரும்பாலான ஆட்டோக்களில் ஜோடி ஜோடியாக வீரர், வீராங்கனைகளைப் பார்க்க முடிந்தது. ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் யார், அந்த ஆட்டோவின் எண், டிரைவர் பெயர் ஆகியவற்றை முன்கூட்டியே போலீஸார் குறித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஆட்டோக்கள் கிளம்பின.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்றன. சென்னை சென்டிரல் ரயில் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடடங்களுக்குச் சென்று அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சுற்றிப் பார்த்தனர்.

சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை மின்சார ரயிலிலும் பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்குள்ளும் புகுந்தனர். கைக்குக் கிடைத்த பொருட்களை பர்ச்சேஸ் செய்து மகிழ்ந்தனர்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளுக்காக சென்னை நகரில் உள்ள 18க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹோட்டல்களில் அறைகள் போடப்பட்டுள்ளன. இங்குதான் அவர்கள் தங்கியிருக்கப் போகிறார்கள்.

கடலிலேயே பல மாதங்களாக இருந்து வந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பல வகையான ஏற்பாடுகளை அமெரிக்க தூதரகம் தடபுடலாக செய்து வைத்துள்ளது.

வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மாடல் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனராம். இது தவிர கோலிவுட் துணை நடிகைகள் பலரும் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனராம்.

வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்து, டான்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்துகளில் மாடல் அழகிகளும், துணை நடிகைகளும் கலந்து கொண்டு அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

வெளிநாட்டு மாடல் அழகிகளை கலாச்சாரக் கோஷ்டி என்ற பெயரில் கூட்டி வந்து தங்க வைத்துள்ளனர். அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும், நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதைத் தவிர வேறு வேலையே அவர்களுக்குக் கிடையாதாம்.

அமெரிக்க வீரர்கள் ஜாலி செய்யும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சென்னை தவிர மாமல்லபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி டெம்பிள் பே, ஸ்டெர்லிங், பார்ச்சூன், ஐடியல் பீச் ஆகிய இடங்களிலும் அமெரிக்க வீரர்களில் ஒரு பிரிவினர் தங்குகின்றனர்.

இதையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் - நிமிட்ஸ்:

நிமிட்ஸ் கப்பலை ஒரு மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு நகரில் உள்ள அத்தனை வசதிகளும் இந்தக் கப்பலில் உள்ளன.

நாலரை ஏக்கர் பரப்பளவில் இந்த ராட்சத கப்பல் உள்ளது. மொத்தம் 23 அடுக்குகளை (மாடிகள்) கொண்டதாக நிமிட்ஸ் கப்பல் உள்ளது. ஆனால் கடல் மட்டத்துக்கு மேலே 5 மாடிகள் மட்டுமே உள்ளன. மற்றவை தண்ணீருக்குக் கீழே உள்ளன.

சென்னை வந்துள்ள நிமிட்ஸ் கப்பலில் 6 வகையான 62 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடலில் நின்றாலும் கூட சற்றும் அசைவில்லாமல் கன் மாதிரி நிற்கிறது நிமிட்ஸ்.

நிமிட்ஸ் கப்பலின் மேல் தளத்திற்குச் செல்ல 4 ராட்சத லிப்ட்டுகள் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த லிப்ட்டில் பயணிக்க முடியும். இதுதவிர மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் லிப்ட்டுகள் மூலம் கீழ் தளத்திற்குக் கொண்டு வருகிறார்கள். அந்த இடம் மிகப் பெரும் தொழிற்சாலை போல காணப்படுகிறது.

கப்பலின் மேல் தளத்தில் கார்களும் உள்ளன. கப்பலின் இந்தாண்டையிலிருந்து அந்தாண்டை செல்வதற்கு இந்தக் கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

கப்பலில் 5,000 பேருக்கு தினசரி 20 ஆயிரம் சாப்பாடு தயார் செய்யப்படுகிறது. வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தும் துணிமணிகளை சலவை செய்ய ராட்சத வாஷிங் மெஷின் உள்ளது. முடிவெட்டிக் கொள்வற்காகவே 2 சலூன்களையும் கப்பலில் வைத்துள்ளனர். வாரத்திற்கு 1,500 பேர் வரை முடி வெட்டிக் கொள்வார்களாம்.

ஒரு தையல்காரரும் கடையில் ... அதாவது கப்பலில் உள்ளார். இதுதவிர நவீன மருத்துவமனை ஒன்று உள்ளது. 53 படுக்கைகளைக் கொண்டது இந்த மருத்துவமனை. அதில் அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. பல் டாக்டர்கள், இதயநோய் மருத்துவர், மன நல மருத்துவர் உள்பட பல்வேறு பிரிவு டாக்டர்களும் உள்ளனர்.

இதெல்லாம் போக ஒரு சிறிய சர்ச்சும் உள்ளது. அங்கு 3 பாதிரியார்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் போர்க் கலைகள் தெரியுமாம். எதிரிகள் தாக்க வந்தால் அட்டாக் பண்ணக் கூடிய பாதிரியார்களாம் இவர்கள்.

அப்புறம் ஒரு தபால் அலுவலகம் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் தபால்கள் வீரர், வீராங்கனைகளுக்கு வருகிறதாம். கூடைப்பந்து, ரக்பி போன்றவை விளையாட மைதானமும் உள்ளன. ரக்பிக்காக தனித் தனி அணிகளும் உள்ளன. போரின்போது எதிரிகளுடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள், போர் இல்லாதபோது அவர்களுக்குள் விளையாடிக் கொள்வார்களாம்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளைப் பார்க்கும்போது படு க்யூட்டாக இருக்கிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் 25 வயதுக்குள்தான் இருப்பார்கள் போலத் தெரிகிறது. பெண்களும் குறைந்த வயதினர்தான் அதிகம். பெண்களுக்கு அமெரிக்க கடற்படையில் நல்ல முக்கியத்துவம் தரப்படுமாம். நிமிட்ஸ் கப்பலில் கூட ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள் அனைவரும் படு கச்சிதமாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் கட்டுமஸ்தாக, நல்ல உயரமாக, கம்பீரமாக இருக்கிறார்கள். தொப்பையை ஒருவரிடம் கூட பார்க்க முடியவில்லை. நம்ம ஊர் போலீஸ்காரர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து தொப்பையில்லாமல் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ளளாம்.

மொத்தத்தில் நிமிட்ஸ் ஒரு கப்பலே இல்லை, மிதக்கும் நகரம் என்று கூறலாம். இப்படிப்பட்ட மிதக்கும் நகரங்கள் அமெரிக்காவிடம் 11 இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+