அதிமுவுக்கு போவீங்களா?.. இது தேவையில்லாத கேள்வி-ராமதாஸ்
சென்னை:திமுக அரசுக்கு முழுப் பதவிக்காலமும் பாமக ஆதரவு கொடுக்கும். இந்த நிைலயில் அதிமுக கூட்டணிக்கு பாமக போகுமா என்ற கேள்வி தேவையற்றது, அதற்கு ஜெயலலிதா கொடுத்த பதிலும் தேவையற்றது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நிருபர்கள், ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, திமுக அணியிலிருந்து பாமக விலகி அதிமுக அணிக்கு வந்தால் பாசத்துடன் வரவேற்போம், கெளரவமாக நடத்துவோம் என்றார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸிடம் கேட்டபோது, நான் பலமுறை இதுகுறித்து தெளிவாக கூறியுள்ளேன்.
திமுக ஆட்சிக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும். திமுக அரசு தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய பாமக ஆதரவு தரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிைலயில் தேவையில்லாத கேள்விகளும், தேவையில்லாத பதில்களும் எனக்கு வருத்தம் தருவதாக உள்ளது என்று கூறினார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications