மருத்துவமனையில் மு.க.முத்து அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. பிள்ளையோ பிள்ளை, போக்கிரி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பல காலமாக தனித்து வசித்து வரும் மு.க.முத்து, கடும் வறுமையில் வாடி வந்தார். அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக நல நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியளித்து உதவினார்.

Muthu

1991ம் ஆண்டு முத்து அதிமுகவில் இணைந்தார். இருப்பினும் தீவிர அரசியலில் இடம் பெறவில்லை. சில காலமாக முத்து எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் முத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை முதல்வர் கருணாநிதி நேற்று சென்று பார்த்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் முத்துவுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தார் முதல்வர்.

இந்த சந்திப்பின்போது முத்துவின் மகன் அறிவுநிதி, மருமகள் பூங்கொடி, மகள் தேன்மொழி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+