அதிமுக எம்எல்ஏவை தாக்கிய திமுகவினர்:ஜெயா டிவி நிருபருக்கும் அடி-கேமரா உடைப்பு
விழுப்புரம்:திருநாவலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவை திமுகவினர் அடித்து உதைத்து, அவரது காரை அடித்து உடைத்தனர். இதை படமெடுக்க முயன்ற ஜெயா டிவியின் நிருபரையும் கேமராமேனையும் தாக்கிய திமுகவினர் வீடியோ கேமராவையும் உடைத்து சேதப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் இன்று இச் சம்பவம் நடந்தது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் இன்று விடப்பட்டது. இந்த டெண்டரை எடுக்க அதிமுகவினர் வந்தபோது அவர்களை திமுகவிர் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி மூண்டது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் அதிமுக எம்எல்ஏ குமரகுரு தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து திமுகவினரை நோக்கி திட்டியபடியே முன்னேறினார். அப்போது சுமார் 200 திமுகவினர் சேர்ந்து கொண்டு எம்எல்ஏவையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்கினர்.
இதையடுத்து எம்எல்ஏ அங்கிருந்து ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி துரத்தி திமுகவினர் தாக்கினர். திமுகவினரின் தாக்குதலால் அதிமுகவினரும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களும் அங்கிருந்து ஓடினர். அவர்களையும் திமுகவினர் விரட்டி விரட்டி தாக்கினர்.
எம்எல்ஏவின் காரையும் அடித்து உடைத்தனர். அந்த கார் சின்னாபின்னாவாகிவிட்டது.
இந்தக் காட்சியைப் படமெடுக்க வந்த ஜெயா டிவி கேமராமேனையும் நிருபரையும் திமுகவினர் விடவில்லை. அவர்களையும் தாக்கினர். நிருபரை போட்டு அடித்து உதைத்ததோடு கேமராவையும் உடைத்து சேதப்படுத்தினர்.
தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாக எம்எல்ஏ குமரகுரு குற்றம் சாட்டியுள்ளார்.
அப் பகுதியில் திமுக, அதிமுகவினர் குவிந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications