For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடமானம் வைத்த மனையை விற்று கடன்br/வழங்கி மோசடி - வங்கி செயலாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News


திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் சிவகிரியில், அடமானமாக வைத்த வீட்டை விற்று, மீண்டும் கடன் வழங்கி கூட்டுறவு வங்கியில் பெரும் மோசடி நடந்துள்ளது.

சிவகிரியில் கடந்த 1988ம் ஆண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவக்கப்பட்டு அதன் செயலாளராக வாசுதேவநல்லூரை சேர்ந்த அசன்மைதீன் பணியாற்றி வந்தார்.

இச்சங்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஏமன்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பாண்டி வீடு கட்டுவதற்காக தனது வீட்டு மனையை அடமானம் வைத்தார். இதற்காக வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.

இதன் மூலம் 20 ஆண்டு கால தவணை அடிப்படையில் கடன் வாங்கினார். இதற்கிடையில் பாண்டிக்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் தனது வீட்டுடன் இருந்த காலி மனையை தனிநபர் ஒருவரிடம் அடமானம் வைத்து கடன் பெற விரும்பினார்.

அந்த இடத்திற்கான வில்லங்க சான்று பெற வாசுதேவநல்லூர் சார்பாதிவாளர் அலுவலகத்தில் மனு செய்தார். அப்போது தனது வீடு கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முருகையாவின் மனைவி பாப்பா என்பவரின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதே ஆண்டு செப் 5ம் தேதி சிவகிரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து ரூ.70 ஆயிரம் கடன் பெற்றுள்ளதும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி இது குறித்து உயர்அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாண்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.

மோசடியில் தொடர்புடையவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் பாண்டி தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, பாண்டியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முருகையா, பாப்பா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவகிரி கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் அசன் மைதீன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்.பிக்கும் வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி மோகன்நவாஸ் தலைமையில் வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணம் தயாரித்து பாண்டியின் வீட்டு மனையை கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அசன் மைதீனை கைது செய்து சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முருகையா மற்றும் பாப்பாவை தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X