For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்களை வழிநடத்த புதிய நேவிகேஷன் சாதனம்!

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: சிஇ இன்போ சிஸ்டம் நிறுவனத்தின் இணையதளமான MapMyIndia.com, கார்களை சரியா திசையில் செலுத்த உதவும் புதிய நேவிகேஷன் சாதனத்தை உருவாக்கியுள்ளது.

மேப்மை இந்தியா நேவிகேட்டர், கார்களில் செல்வோர் விரைவாகவும், தங்களது பயணத்தை பாதுகாப்பாகவும் மேற்கொள்ள உதவுகிறது. ஜிபிஎஸ் முறைப்படி இந்த நேவிகேட்டர் செயல்படும்.

இந்த நேவிகேட்டருக்கு 'வே-பைண்டர் நேவிகேட்டர்' என பெயர். இந்த நேவிகேட்டரை, ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்கள் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கு மாதம் ரூ. 400 சந்தா கட்ட வேண்டும்.

ஜிபிஆர்எஸ் இணைப்பு கொண்ட அனைத்து ஜிஎஸ்எம். போன்களிலும் இந்த சேவையைப் பெற முடியும். மேலும் பிளாக்பெர்ரி போன்கள் மற்றும் விண்டோஸ் வசதி கொண்ட செல்போன்களிலும் இந்த வசதி கிடைக்கும்.

இந்த நேவிகேட்டரை நாடு முழுவதும் விற்பனைக்கு விட கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மேப்மை இந்தியா.காம் ஈடுபட்டுள்ளது. தற்போது இணையதளம் மூலாகவும், சில ஷாப்பிங் இணையதளங்கள் மூலமாக இந்த நேவிகேட்டர்களை மேப்மை இந்தியா.காம் விற்று வருகிறது.

மேலும், கெட்டிட் எல்லோபேஜஸ் நிறுவனத்துடனும் மேப்மை இந்தியா.காம் வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது. கெட்டிட் எல்லோ பேஜஸ் புத்தகங்களில் இந்த நேவிகேட்டர் குறித்த விளம்பரங்கள் இடம் பெறும்.

இந்த நேவிகேட்டர் சாதனைத்தை நாம் காரில் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த நேவிகேட்டர் மூலம் நாம் தற்போது எந்த இடத்தில் பயணிக்கிறோம், நாம் போகும் இடத்திற்கு விரைவாக போகும் குறுக்கு வழி எது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த நேவிகேட்டர் தெரிவிக்கும்.

இந்த சாதனத்தில் தானியங்கி குரல் வழிகாட்டியும் உண்டு. நாம் போகும் பாதை குறித்து இது அவ்வப்போது அறிவிக்கும்.

இதுதவிர ஏடிஎம் மையங்கள் இருக்கும் இடங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல்கள், முக்கிய இடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் குறித்த பட்டியலையும் இது கொடுக்கும்.

இதுதவிர பாடல் கேட்கவும், படங்கள் பார்க்கவும், விளையாட்டுக்கள் ஆடவும் இதில் வசதி உண்டு. ஒரு கால்குலேட்டரும் கூட இதில் உண்டாம்.

தற்போது இந்த நேவிகேட்டர் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் இந்திய மொழிகளிலும் இதைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இனி 'கண்ணை மூடிக்' கொண்டு காரை ஓட்டலாம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X