For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்காக சிறை செல்லத் தயார் - திருமாவளவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைச் சிறுத்ைதகளுக்கு சிறைவாசம் புதிதல்ல. சிறுத்ைதகள் ஓய்வெடுக்கும் குகைதான் சிறை. ஈழத் தமிழர்களுக்காக சிறை செல்லத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசின் சமூக நீதித்துறை, தாழ்த்தப்பட்ட மாணவர் கல்வி உதவித் தொகை மற்றும் கடன் உதவி தொகை பெற அரசு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் எனவும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையே கிடையாது எனவும் அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான விரோத செயல். அந்த அரசு ஆணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் ரயில் மறியல் நடத்தப்படும்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மாநாடு திமுக அரசுக்கு நெருக்கடி தந்திருப்பதாக கூறுவது தவறு. அதிமுகவினரின் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசார் துணை போகக் கூடாது.

இலங்கை அரசின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியதாக இந்திய அரசு உள்ளது. அதனால் இலங்கை அரசு கட்சத்தீவுகள் அருகே கடலில் கண்ணி வெடிகளை மிதக்க விட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

வருகின்ற 22ம் தேதி தமிழக அரசின் அம்பேத்கர் விருது நல்லக்கண்ணுவுக்கு பாராட்டு விழாவும், கலைஞர்கள் நன்றி தெரிவிக்கும் விழாவும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். வருகின்ற மார்ச் மாதம் 10ம் தேதி மதுரையில் மகளிர் விடுதலை என்ற தலைப்பில் மகளிருக்கான மாநாடு நடத்தப்படும்.

ஈழ தமிழர்களுக்காக கண்டனமும், இரங்கலும் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டா, இல்லையா என்று தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகளுக்கு சிறைவாசம் என்பது புதிதல்ல. சிறை என்பது விடுதலை சிறுத்தை ஓய்வு எடுக்கும் குகை என்றார் திருமாவளவன்.

English summary
Ready to face arrest for Lankan Tamils: Tirumavalavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X