மைக்ரோசாப்ட் நெருக்கடி: ஏஓஎல்லுடன் இணைய யாகூ முடிவு?

உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட், இன்டர்நெட் ஜாம்பவான் யாஹூவை விலைக்கு வாங்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயன்று வருகிறது. ஆனால், இந்த முயற்சிகளை யாகூ தொடர்ந்து முறியடித்து வருகிறது.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி யாகூவுக்கு 44.6 பில்லியன் டாலர் விலை தர தயார் என்றும், யாகூவின் பங்குகளுக்கு அவற்றின் இப்போதைய விலையை விட 62 சதவீதம் அதிக ப்ரீமியம் தரத் தயார் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்தது. இதையடுத்து சரிவில் இருந்த யாகூவின் பங்கு விலை அதிகரித்தது.
யாகூவை கைப்பற்றுவதன் மூலம் உலகின் முன்னணி சர்ச் என்ஜினான கூகுளுடன் நேரடி மோதலுக்கு மைக்ரோசாப்ட் தயாராகி வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட்டின் முயற்சியை இந்த முறையும் யாஹூ முறியடிக்கும் என்று தெரிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை யாஹு நிறுவனத்தின் 10 உறுப்பினர்கள் அடங்கிய இயக்குநர்கள் கூட்டம் நடந்தது. அதில் மைக்ரோசாப்ட் குறிப்பிடும் விலை மிகவும் குறைவு என்று கருத்து தெரிவிக்கப்பட்டதோடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் யாகூவை விற்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
அதேசமயம், கூடுதல் விலை தர மைக்ரோசாப்ட் முன்வந்தால் அதை யாஹூ ஏற்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த வார இறுதியில் யாஹூ இயக்குநர்கள் கூட்டம் மீண்டும் நடக்கிறது. அதற்குள் மைக்ரோசாப்ட் தரப்பிலிருந்து புதிய விலை கூறப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஓஎல்லுடன் கூட்டணி?:
இந் நிலையில் மைக்ரோசாப்டின் நெருக்கடியில் இருந்து தப்ப அமெரிக்காவின் இன்னொரு இண்டர்நெட் ஜாம்பவானான ஏஓஎல்லுடன் தனது நிறுவனத்தை இணைத்துவிட யாகூ முடிவு செய்துவிட்டதாக லண்டனில் இருந்து வெளியாகும் த டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
மேலும் தனது போட்டியாளரான கூகுள் மற்றும் டிஸ்னி ஆகியோருடன் கூட கைகோர்க்க யாகூ தயாராகி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏஓஎல்-யாகூ ஆகியவை ஒன்றாக இணைய திட்டமிட்டன. ஆனால், விலை படியாததால் அந்த முயற்சிகள் வெல்லவில்லை. இந் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்தையில் புகுந்து பங்குகளைக் கைப்பற்றி யாகூவை தங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கும் முன்பாக நிறுவனத்தை காப்பாற்றிக் கொள்ள யாகூ தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அதில் ஒரு பகுதியாகத்தான் ஏஓஎல்லுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் தெரிவிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications