எனக்கு டெல்லியைக் கண்டு பயமில்லை-விஜய்காந்த்
சென்னை: டெல்லியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதனும் சில கேள்விகளை அறிக்கைகள் மூலம் எழுப்பியுள்ளனர். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி அவர்கள் நிர்ணயித்த இலக்கை அவர்களாலேயே எட்ட முடியவில்லை.
இந்தியாவிலேயே வேலை இல்லாதோர் தமிழகத்தில் தான் அதிகம். சட்டசபையில் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் தங்கள் தலைவர்களைத் துதி பாடுவதிலேயே அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
என் விருத்தாசலம் தொகுதியைப் பற்றியும், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்தும் சட்டசபையில் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட அரசு அவற்றில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
நாற்பது பார்லிமென்ட் உறுப்பினர்களை எங்களிடம் தந்தால் டெல்லியில் யார் இருந்தாலும் அவர்களை பிடித்து உலுக்கி கேட்பேன். கலக்குவேன் என்று பேசியது ஆணவம் அல்லவா என்று அமைச்சர் கேட்கிறார். டெல்லியை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
விசாரணை கமிஷனைக் கண்டு பயப்படுவதோ அல்லது ஊழல் வழக்குகளில் சிக்கியதாலோ அல்லது சட்டத்திற்கு மீறி சொத்துக்களை சேர்த்தாலோ அஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்காக எதையும் செய்வேன் என்ற உணர்வில் தான் அப்படி பேசினேன்.
நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற என்னை அர்ப்பணித்து விட்டேன்.
இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications