
பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்!
லண்டன்:இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர்.
அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலும் உள்ளன.
எப்படி இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் வந்தன என்று டாக்டர்களால் கூற முடியவில்லை. இருப்பினும், 125 பேரில் ஒருவருக்கு இப்படி கூடுதல் சிறுநீரகங்கள் இருக்குமாம்.
இப்போதைக்கு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் சிறுநீரக தொற்று நோய்கள் ஏற்படக் கூடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லவேளை டாக்டர் அமீத் குமார் கண்ணில் லாரா படவில்லை. பட்டிருந்தால் நான்கையும் பறித்திருப்பார்!!